Header Ads



மக்காவில் கிறேன் விழுந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது


மக்காவில் உள்ள பெரிய மசூதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு கிரேன் விழுந்ததில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்த வழக்கை சௌதி அரேபியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்காவில் உள்ள நீதிமன்றம் இந்த சம்பவத்தை பொறுத்த வரை தீர்ப்பு சொல்ல தனக்கு அதிகார வரம்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

அலட்சியம் செய்தது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை புறக்கணித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இதில் 14 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

அந்த நபர்கள் யார் என்று பெயர்கள் குறிப்பிடப்படவில்லை ஆனால் அதில் சௌதியை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் ஒருவரும் அதில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

வருடாந்திர ஹஜ் பயணம் தொடங்குவதற்கு சிறிது முன்பாக, 2015ல் செப்டம்பர் மாதத்தில் வீசிய பலமான காற்றில் இந்த கிரேன் விழுந்தது.

பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் சௌதி பின்லேதின் குழுவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் நடந்த இடமும் அந்த விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற ஒரு பகுதியாகும்.

No comments

Powered by Blogger.