பள்ளிவாசலுக்கு செல்ல தடைவிதிப்பதை, இந்த அரசு எப்படி நியாயப்படுத்தலாம்..?
-இன நல்லுறவைச் சீர்குலைக்கும், புதை பொருள் ஆராச்சி-
புதைபொருள் ஆராச்சி பிரதேசங்களைப் பேணுவது தொடர்பாக அரசு விசேட அக்கறை காட்டி வருகிறது. புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஊர்காவல் படையினரைச் சேவையிலீடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார்.
புதைபொருள் பெறுமானமிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது. அதில் தர்க்கிப்பதற்கு கருத்துக்கள் இல்லை.
ஆனால் இன்று புதைபொருட் பிரதேசம் என சிறுபான்மையினரது காணிகள், ஆலயங்கள் பள்ளிவாசல்கள் இலக்காக்கப்படுவதனை அவதானிக்கின்றோம்.
அக்கரைப்பற்று எல்லையிலுள்ள 250 வருட காலம் பழைமை மிகு அம்பாறை அரச அதிபர் அனுமதி வழங்கிய பொத்தான ஆராய்ச்சிபுட்டி தர்ஹாவும் பள்ளிவாசலும் வெளியார் பிரவேசிக்காதவாறு முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. நேற்று வெளியான நவமணியில் தலைப்புச் செதியாக இது வெளிவந்துள்ளது.
இதுபோன்று அண்மையில் ஜனாதிபதி தலைமையில் தொல்பொருள் தள பெறுமதி மிகு இடங்களைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் செங்கலடி பாசிக்குடாவின் சந்தியிலுள்ள காணியில் தொல்பொருள் பெறுமதி மிகு பௌத்த புனிதத்தலங்கள் அழிக்கப்பட்டதாகவும் அதற்கு முஸ்லிம்களே காரணம் என்றும் அபட்டமான குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியிருந்தார். இந்தக் காணியிலும் 1964இல் இருந்தே முஸ்லிம் ஸியாரமும் தக்கியாவும் இருந்துள்ளது.
புதைபொருள் பெறுமானம் மிகு பிரதேசம் என்ற பெரில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இழக்கும் ஆபத்தினை எதிர் நோக்கி வருவதனையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
கடந்த காலங்களில் சில பிரதேசங்களில் புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசம் எனப் பிரகடனப்படுத்துவதற்கு வெளியிலிருந்து சில அதிகாரிகள் திட்டமிட்டு புதை பொருள் தடயங்களைப் புதைத்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
புதை பொருள் பெறுமதி மிகு பிரதேசங்களைப் பாதுகாப்பது என்பது ஓர் இனத்துக்கோ ஒரு சமயத்துக்கோ உரியதல்ல. அது பொதுவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லாட்சி அரசினை உருவாக்கியது கடந்த காலங்களில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் நடக்காதிருப்பதற்காகும். ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது எல்லாம் தலை கீழாகவே நடக்கின்றன.
இரு நூற்றாண்டு காலமாக இருந்து வரும் இறையில்லத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிப்பதனை இந்த அரசு எப்படி நியாயப்படுத்தலாம்?
இந்த அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் இருபத்தியொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை அங்கீகரிக்க முடியுமா?
அக்கரைப்பற்று பொத்தானையில் நடை பெற்றுள்ள நிகழ்வு நாளை ஏனைய இடங்களில் நடக்காதிருப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அளிக்கும் உத்தரவாதம் என்ன?
புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசங்கள் தொடர்பாக ஆராவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது போன்ற பணிகளில் சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்காத சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசு இது குறித்து கடுமையாகச் சிந்தித்து எந்த ஒரு இனத்திற்கும் பாதிப்பு எற்படாத வகையில் இவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதைபொருள் ஆராச்சி என்ற போர்வையில் நடக்கப் போகும் விடயங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகத் தலையிடாவிடின் வெள்ளம் தலைக்கு மேல் போவிடும் என்பதனை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்
நாங்கள் கொண்டு வந்த நல்லாட்சி என்று நிமிடத்துக்கு ஒரு தடவை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. கொஞ்சம் பொறுத்து பாருங்கள் என்ன நடக்கும் என்று ராஜபக்ச சம்பிக்க தலையில் போட்டது பொல இப்போதைய ஜனாதிபதி தற்போதைய நீதி அமைச்சர் விஜயதசவின் தலையில் கட்டி ஆளுக்கு ஆள் குறை சொல்லி கடைசியில் எண்களின் குரல்வளையே அறுப்பார்கள். அது வரைக்கும் இந்த பார்லிமெண்டில் அங்கம் வகிக்கும் எல்லாம் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் கோமா நிலையில் இருப்பார்.
ReplyDeleteNAMMA ULLATHILE WAHN PIRANTHU WITTATHU.WAHN ENRAAL ENNA ???AALLIM IDAM POOI KEATPOAM
ReplyDeleteIwarhal muslimgalidam aiyudham ullanawa andru ariya edhirparkindraner.sandhehathukuriya idangal anaithum parisodhikapadum.mundrawadhaha sirupanmaiya walum ella uruhalilum sinhalawarhal perumpanmayaha iruka wendum.
ReplyDeleteMuslimgalidaye jamath matrum urarhalaium otrumai padutha wendum.hindu sahodhararhalaium inaika wendum.ayudham than wali.tholinutpangalai uruwakawendum.poruthu irundhu parpom
ReplyDeleteEllorum ondru padungal.welinatu sadhi,ulnatu sadhi anaithaum muri adipom.
ReplyDeleteElla paitchiyaum aduthu kollungal.irakumadhi saiya wendiy anaithaum irakumadhi seyyungal.thayar nilail irungal.ella mahanathu muslimgaludan hindhukaludan ondru padungal paitsi aliungal
ReplyDeleteSirupanmai makkalin urumaiyil kai waipadhu thawaru.inimel ekkaranatha kondum yaraum katikoduka wendam.ondru padungal wetriyai nilai natungal
ReplyDeleteIwarhal muslimgalidam aiyudham ullanawa andru ariya edhirparkindraner.sandhehathukuriya idangal anaithum parisodhikapadum.mundrawadhaha sirupanmaiya walum ella uruhalilum sinhalawarhal perumpanmayaha iruka wendum.
ReplyDeleteElla paitchiyaum aduthu kollungal.irakumadhi saiya wendiy anaithaum irakumadhi seyyungal.thayar nilail irungal.ella mahanathu muslimgaludan hindhukaludan ondru padungal paitsi aliungal
ReplyDeleteEllorum ondru padungal.welinatu sadhi,ulnatu sadhi anaithaum muri adipom.
ReplyDeleteமுஸ்லிம்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்களை துவம்சம் செய்வதற்கு பல நிகழ்ச்சிநிரல்களையும் இதற்காக பல கோடி டொலர்களையும் முதலீடு செய்து யகூதிகளும் நசறானிகளும் ஒன்றிணைந்து காரியமாற்றுகின்றனர்.
ReplyDeleteஅந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகத்துடன் ஒட்டிஉறவாடுவதை பொறுக்க முடியாத இத்தரப்பினர் காவியணிந்த சில காடயர்களைப் பயன்படுத்துகின்றனர்.
சகோதர சிங்கள மக்களிடையே காவிகளுக்குள்ள செல்வாக்கு,திரைமறைவிலான தேசிய சர்வதேச ஆதரவு, அரசியல் காழ்ப்புணர்வு என பல காரணிகள் இதனை வலுப்பெறச்செய்துள்ளது
ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது அந்நாட்டிலுள்ள அத்தனை சமூகமும் பாதிப்பை நுகரும் என்பதை கடந்த கால யுத்தம் பாடம்புகட்டியிருந்தும் மூளைச்சலவை செய்யப்பட்ட இத தரப்பு உணர்ச்சி பெறுவதாயில்லை.
பணமும் புகழும் இலகுவாக கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைவதனால் இன்னும் பலர் இணைந்துகொண்டு அதிக தாக்கத்தை எம்மீது ஏற்படுத்துவர். எனவே எதிர்கால இலங்கை முஸ்லிம்களை அச்ச சூழல் வெகுவாக சூழ்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அள்ளாஹ்வின் சூழ்ச்சியை இவர்களை நோக்கி திருப்பிவிட நாம் அள்ளாஹ்வை நோக்கி விரைவாகத் திரும்பவேண்டியுள்ளது.
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
Delete(அல்குர்ஆன் : 11:52)
www.tamililquran.com