Header Ads



ரவூப் ஹக்கீமை வழி மறித்து, மக்கள் ஆர்ப்பட்டம்


அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறிப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமது குழந்தைகளுடன் நேற்று மாலை பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறுகின்ற புகை மற்றும் நச்சு வாயுக்களினால் சுவாச நோய், தோல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு தாம் முகம் கொடுப்பதாகவும் கருவில் தரிக்கின்ற குழந்தை கூட கரைந்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சில பெண்கள் அமைச்சரிடம் இதன்போது முறையிட்டனர்.



5 comments:

  1. சகோதரிகளே அமைச்சர் ரவூப் ஹகீமால் இந்தவிடயத்தில் தற்போது தீர்கமான முடிவுகளை எடுத்து அதில் அவரால் உருதியாக செயல்பட முடியாது காரணம் நம்முடய கயவர்கள்! முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சர் ரவூப் ஹகீமுக்கு எதிராகவும் செயல்பட பெரும்பான்மை இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட நம் முஸ்லிம் நயவஞ்ஞகர்கள் இருக்கின்றார்கள் குறிப்பாக மக்கள் காங்கிரஸ் தலைவன் இவர்களால் முஸ்லிம்காங்கிரஸ் கட்சி அதனுடைய பலத்தை எப்போதே இழந்து தத்தளிக்கின்றது!

    ReplyDelete
  2. Riyal Abdulla, முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மக்கள் பலத்தை இழந்துள்ளதட்கு, மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரை காரணம் சொல்லுவது ஆடத்தெரியாதவன் அரங்கு பிழை என கூறுவதட்கு ஒப்பாகும். முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் பலத்தை இழந்து கொண்டு போவதட்கான முழுப் பொறுப்பையும் ஹக்கீம் அவர்களும் அவரது அடிவருடிகளாக எம்பிக்களும் இவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உம்மை போன்றவர்களுமாகும். உங்களது முஸ்லீம் நயவஞ்ஜகர்கள் என்ற சொட்பிரயோகம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. தயவு செய்து ஹக்கீம் அன் கோ களின் அரசியல் முன்னெடுப்புகளை சற்று சீர் தூக்கி பாருங்கள்.

    ReplyDelete
  3. Riyal Abdulla, முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மக்கள் பலத்தை இழந்துள்ளதட்கு, மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரை காரணம் சொல்லுவது ஆடத்தெரியாதவன் அரங்கு பிழை என கூறுவதட்கு ஒப்பாகும். முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் பலத்தை இழந்து கொண்டு போவதட்கான முழுப் பொறுப்பையும் ஹக்கீம் அவர்களும் அவரது அடிவருடிகளாக எம்பிக்களும் இவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உம்மை போன்றவர்களுமாகும். உங்களது முஸ்லீம் நயவஞ்ஜகர்கள் என்ற சொட்பிரயோகம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. தயவு செய்து ஹக்கீம் அன் கோ களின் அரசியல் முன்னெடுப்புகளை சற்று சீர் தூக்கி பாருங்கள்.

    ReplyDelete
  4. இப்படியான நீண்ட காலச் செயற்திட்டங்கள் அனைத்தும் கடந்த அரசினது காலத்தில் ஏற்படுத்தப்பட்டனவாகும்.இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளை அப்பொழுதே அப்பகுதி மக்கள் உணர்ந்திருக்க வேண்டும்.தற்போதைய நிந்தவூர் அமைச்சரும் அப்பொழுது ஒரு மக்கள் பிரதிநியாக வாய் பேசாதிருந்தார்.மட்டுமல்ல அவ்வூர் மக்களைத் திசைதிருப்பும் ஒரு நடவடிக்கையாக அன்று அனல் மின்னிலையத்தின் பெயரளவு உரிமையாளர் ஊருக்கே ஒரு வேளை உணவு கொடுப்பது போல நடந்து கொண்டார்.அதற்கு பள்ளிநிருவாகமும் அன்று அவரது நரித்தனத்தை உணராது ஏமாந்து விட்டனர்.

    ReplyDelete
  5. சகோதரர் Kurvi அவர்களே இலங்கையில்தான் இருக்கின்றீர்களா? ரிசாத் பதிவுதீனைபற்றி இன்னும் விளங்காமல் இருக்கின்றீர்களா? தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு நடந்த சோகத்தின் பின் இலங்கை முஸ்லிம்களுக்கு தேசிய தலைவராக ஆக ஆசைபடும் மக்கள் காங்கிரஸ் தலைவன் ரிசாத் என்ன செய்தார்? மஹிந்த ஜனாதிபதி தேர்தலை அறிவித்தவுடன் ரிசாதின் நிலைபாடு எவ்வாறு இருந்த்து தெரியுமா?இதற்கு நயவஞ்சக வார்தயை பாவிக்காமல் எதை பாவிப்பது என்று சொல்லவும் மேலும் அமைச்சர் அஸ்ரப் அவர்களின் காலத்திலே முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குல் நயவஞ்ஞகர்களாக கண்டுபிடிக்கப்பட்ட சில கயவர்களும் இவ்வாறே செயல்பட்டார்கள் இப்படி பட்டவர்களை கட்டசிக்குல் வைத்துகொண்டு ரவூப் ஹகீமால் எப்படி முஸ்லிம்கள் சார்பாக சிலமுடிவுகளை எடுத்து பெருபான்மை அராசாங்கத்துடன் முருகிகொள்ளமுடியும் JVP கட்சியை வீரவன்சவை வைத்து சின்னாபின்னமாக்கியது போன்று ரிசாட் பதிவுதீனை வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை இழக்கச் செய்து மஹிந்த வெற்றிகண்டான் இது உங்களுக்கு தெரியுமா? மஹிந்தவின் இத்திட்டத்திற்கு பாவிக்கப்பட்டவர் யார் ரிசாதையா,அதா உள்ளாவையா,ஹிஸ்புல்லாவையா? அல்லது வேறு முஸ்லிம் அமைச்சர்களையா நீங்கள் சொல்லவும்!

    ReplyDelete

Powered by Blogger.