முஸ்லிம்களுக்கு எதிரான, கலவரத்தின் பின்னணியில் கோத்தா
அளுத்கம வன்செயல்களில் பொது பலசேனா அமைப்புடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷவே பின்னணியில் இருந்தார்.
கலவரத்துக்கு காரணமாக அமைந்த பொதுபலசேனாவின் பொதுக் கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு பல தரப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டும் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க அதற்குத் தடை விதிக்கவில்லை என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம வன்செயல்களால் பெரும் சொத்துகள் அழிவுக்குள்ளாகின. உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆளுத்கம வன்செயலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தனக்குத் தெரியாதென மஹிந்த ராஜபக் ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு தெரிவித்திருப்பது வேடிக்கைக்குரியதாகும். அன்று பொதுபலசேனாவின் கூட்டம் தடை செய்யப்பட்டிருந்தால் வன்செயல்கள் இடம்பெற வாய்ப்பேற்பட்டிருக்காது.
Eppdi...? Ippo neenga (Nallaatchi) seirathai pola President maaligaikku koottit poi virnthu koduttu thooonga vekkra mathiriya .....????
ReplyDeleteஇதற்குப் பின்னனியில் செயற்பட்ட இந்த சூத்திரதாரியை நல்லாட்சி விசாரணை நடாத்துமா?
ReplyDelete