Header Ads

தாருஸ்ஸலாமை கபளீகரம் செய்தேனா...? ஹக்கீமின் விளக்கம் இதோ..!

வில்பத்து விவகாரத்தின் பின்னால் இருப்பது அப்பட்டமான இனவாதம். இதற்கு இந்த ஆட்சியாளர்கள் துணைபோக முடியாது. மக்களுக்காக அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு போராடவேண்டிய ஒரு முக்கியமான கட்டத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு எங்களுடைய அணி பலமாக இருக்கவேண்டும்.

இவ்வாறான பொது விடயங்களில் நாங்கள் பொதுவான விடயங்களில் உடன்பாடுகளை காணமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று நேற்றிரவு (15) புத்தளம் நுஹ்மான் வரவேற்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பிரச்சினை என்பது சமூகத்தின் பிரச்சினை. அதிலுள்ள மக்கள் வில்பத்து காட்டை அழித்து குடியேறியுள்ளதாக அநியாயமாக குற்றம்சாட்டுகின்றனர். இதில் ஒருவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும், நாங்கள் அந்த விடயத்தில் சமூகத்தின் பக்கம் நிற்கிறோம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வில்பத்து பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான அதாரங்களை சேகரித்துள்ளேன். அதுகுறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளேன். அதில் ஜனாதிபதிக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதையும் முஸ்லிம்கள் நாட்டு சட்டத்தை மீறுபவர்களாக பிழையாக சித்திகரிப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டவுள்ளேன். வில்பத்து காடழிப்பை காரணம்காட்டி கரடிக்குழி, மறிச்சுக்கட்டி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு தடைகள் போடப்படுகின்றன.

சிறிய விடயங்களை பூதாகரமாக்கி சமூகத்துக்கு தீங்கிழைப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. சமூகத்தின் பிரச்சினைக்கு நாங்கள் குரல்கொடுக்கவேண்டும். மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக நாம் அரசுக்குள் இருந்துகொண்டு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான பொது விடயங்களில் நாம் உடன்பாடுகளை காணும் வகையில் செயற்படவேண்டும். ஆனால், இயக்கமும் அதன் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும்.

இப்போது இயக்கத்திற்குள் இருந்துகொண்டே குழிபறிப்பவர்கள் இருக்கின்றனர். வெளியில் இருப்பவர்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு கட்சிக்குள் இருந்தவாறே பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு நாங்கள் ஒருபோதும் சோரம்போக முடியாது.

சந்தர்ப்பவாதத்துக்காக கட்சியின் உறுப்பினர்களை பஷில் ராஜபக்ஷவிடம் ஒட்டுமொத்தமாக விற்றவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். தங்களுக்கு பதவி கிடைக்கும் வரை அவர்கள் இந்தக் கூத்தை தொடர்வார்கள். தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரும், முதலமைச்சரும் கபளீகரம் செய்ததாக கதைகட்டிவிடுகிறார்கள். இந்த அடிப்பைடையற்ற குற்றச்சாட்டுகளை புத்‌தகமாக வெளியிடுபவர்கள் இந்த கட்சிக்குள் இருப்பவர்கள்தான்.

தங்களுக்கு பதவி இல்லையென்றால் கட்சியும் அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவ்வாறான வேலையை செய்கிறார்கள். அவ்வாறான சதிகாரர்கள் இருந்தாலும் நாங்கள் கட்சியை பலமான நிலையில் வழிநடாத்திச் செல்கிறோம்.

கட்சியிலே பெரிய பூதாகரமான பிரச்சினையாக வெளிச்சக்திகள் பெருப்பித்துக் காட்டுவதற்கு காத்துக்கொண்டிந்த பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் செயலாளர் நாயகம் தற்போது தலைவருடன் மேடையில் இருக்கின்‌றார்.

புத்தளம், வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்காக 24 மணித்தியாலம் இயங்கக்கூடிய கிளையொன்றை நாங்கள் புத்தளத்தில் திறந்து வைத்துள்ளோம். இந்த கிளையை வழிநடாத்தும் பொறுப்பை கட்சி செயலாளர் ஹஸன் அலி ஏற்றுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் தேவை என்று, கட்சியை ஆரம்பித்த போது மர்ஹூம் அஷ்ரப், "எமது பார்வை" என்ற பெயரில் சிறிய நூலொன்றை வெளியிட்டார்.

அதனை நாங்கள் மீள்பிரசுரம் செய்து, ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறும் "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டத்தின்போது வழங்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

6 comments:

  1. Still you are collecting data.Submit it after the final verdict.

    ReplyDelete
  2. Why don't you submit the Vilpathu report to Parliament?

    ReplyDelete
  3. தலைமைத்துவத்தின் நிலைமை எப்படி உள்ளது என்பதை சற்று சீர்தூக்கி பாருங்கள்.

    ** மக்களுக்காக நீங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கிறீர்களா?? அல்லது உங்களுக்காக ( பட்டம் பதவிகளுக்காக ) மக்களை காட்டி அரசாங்கத்துக்குள் இருக்கிறீர்களா?? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

    ** ஒருவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும், நாம் சமூகத்தின் பக்கம் நிக்கிறோம் என்று கூறுவதட்கு வெட்கம், சூடு, சுரணை இல்லையா? சமூகத்தின் பக்கம் இருந்து எதை கிழித்தீர்கள். இந்த பிரச்சினை எத்தனை வருடங்களாக அரங்கேறுகிறது. ஒரு போராட்டம், ஒரு எதிர்ப்பு அறிக்கை கின்சித்துக்கும் செய்யாமல், வெறும் ராஜகுமாரன் மாதிரி வலம்வருகிறீர்.

    ** நீங்கள் ஆதாரங்களை இப்போதுதான் சேகரித்துள்ளீர்கள். இனித்தான் கடிதம் எழுத உள்ளீர்கள். வெட்கம் வெட்கம்... நீர் ஒரு நாள், ஒரே ஒரு நாள் அந்த மக்களுடன் தங்கி பாரும் அப்போது விளங்கும் வருடக்கணக்கில் அல்லல் படும் அந்த மக்களின் கஷ்டம்.

    ** மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி. சமூகத்தின் பிரச்சினைக்கு நாங்கள் குரல் கொடுக்க வேண்டும். சா.... என்ன பெரிய அரசியல் ஞானமும், அவதானமும், கண்டுபிடிப்பும். மக்களும், சமூக ஆர்வலர்களும், மீடியாவும் ஏன் றிசாத் பதுர்டீனும், கூப்பாடு போட்டு, தள்ளையும் உடல்லையும் அடித்துக் கொண்டு வருடக்கணக்கில் கத்தி திரிகிறார்கள். நீர் இப்போதுதான் குரல் கொடுக்க வேண்டும் என்கிறீர். நீங்கள் தான் தலைமைத்துவத்தின் உதாரண புருஷர். அதுக்குள்ள தனித்துவம் பேணப்பட வேண்டும். அதான் உங்களதும், உங்களது அடிவருடிகளினதும் ( மந்திரி, உதவிமந்திரி, பிரதித் தலைவர்...etc..etc..) தனித்துவம் உங்கள் கடசிக்குள் பேணப்படுகிறதே.

    ** உங்களை விடவா ( ஒரு தொகை; இடம் பத்தாது) அவர்கள் சோரம் போனார்கள். கோன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி. நீர் மகிந்த ராஜபக்ச, அவர்கள் பசில் ராஜபக்ச அவ்வளவுதான். தாருஸ்சலாமை வைத்துக்கொண்டு ஹாபிஸ் நசீர் என்ன செய்தார் ( முஸ்லீம் காங்கிரசை அழிப்பதட்காகவே கட்சி தொடங்கியவர்) என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. நீர் ஒரு சட்டத்தரணி தானே... புத்தகம் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமே. அதை உங்களால் செய்ய முடியாது, அதில் சுத்து மாத்து உள்ளது என்பது உமக்கும் தெரியும், மக்களுக்கும் புரியும்.

    ** உண்மையிலேயே செயலாளர் பிரச்சினை உமது கபடத்தனத்தால் நல்லதொரு சட்டப்பிரச்சினையை எதிர் கொண்டீர். அதனால் ஹஸனலியிடம் தலை சொறிந்தீர், அவரும் அதற்குத்தான் ஆசை பட்டார் போல் தெரிகிறது. காலம் பதில் சொல்லும்.

    ** ஸ்ரீ இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஏன் தேவை என்பதை உம்மால் விளக்கம் கொடுக்க முடியாவில்லை, அதட்கும் அந்த தலைவரின் விளக்கம் தான் தேவைப்படுகிறது. நல்ல விடயம் தான். அந்த புத்தகத்தை மக்களுக்கும் கொடுங்கள் அவர்களும் வாசிக்கட்டும். அதே மாதிரி நீங்களும், உங்கள் அடிவருடிகளும் வாசியுங்கள். அதன் பிறகு பார்ப்போம், ஒன்றி நீங்கள் திருந்துங்கள், அப்படி இல்லாவிட்டால் அந்த மக்களே உங்களை அடித்து விரட்டட்டும்.

    ReplyDelete
  4. தலைமைத்துவத்தின் நிலைமை எப்படி உள்ளது என்பதை சற்று சீர்தூக்கி பாருங்கள்.

  5. அந்தப் பிரச்சினை எப்போத ரிசாட் mp எல்லா இடங்களிலும் பேசிக் கொண்டுவருகின்றார்,அதை யாரும் அவருடன் ஒத்துழைக்கவல்லையே?காரணம் போட்டி பொறாமை,புத்தளம் சென்று அரசியல் பேசியதால் அங்கு எதையாவது நடிக்க வேண்டுமே,ஆட்சி கையிலிருக்கும் வரை அது கை மாறினால் எல்லாம் விளங்கும் ,இருக்கும் போதாவது ஏதாவது உலகிற்கும் மறுமைக்கு நல்லதை செய்வீர்கள் என எதிர் பார்க்கின்றோம்,பதவியைக் கொடுத்தும் சோதிப்பான் எடுத்தும் சோதிப்பான்,

    ReplyDelete

Powered by Blogger.