Header Ads



மாட்டிறைச்சிக் கடைகளை, முற்றாக இல்லாது செய்வோம் - வலம்புரி பத்திரிகை

ஈழத்திருநாட்டை சிவபூமி என்று போற்றி அழைத்தவர் திருமூலர். இராவணன் மேலது நீறு என்று போற்றும் அளவில் தலைசிறந்த சிவபக்தன் ஆகிய இராவணன் ஆண்ட நாடு இலங்காபுரி.

எனவே இலங்கைத் தீவை சிவபூமி என்று திருமூலர் போற்றியதில் பொருள் உண்டு.சிவபூமி என்பது அன்பின் வடிவமானது. அன்பே சிவம் என்பதே சைவ சமயத்தின் அடிப்படை அன்பு என்பது இன்ப ஊற்று.

தன்னுயிர்போல் மன்னுயிரைப் போற்றும் மகத்துவமே அன்பின் விளைவுதான்.அன்புடையார், தம்முயிர் போல் மற்றைய உயிர்களையும் போற்றுவர், எனவே கொல்லாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை எனலாம்.

எனினும் திருமூலர் கண்ட சிவபூமி இன்று தன்னிலை இழந்துள்ளது. சிவசின்னங்களில் ஒன்றாகிய திருநீற்றை தந்தருளும் பசுவை கொல்லும் பாவகாரியம் நம்மண்ணில் தாராளமாக நடக்கிறது.

இதிலிருந்து விடுபடுவதற்காக பசு வதைக்கு எதிரான அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் முயற்சி செய்தாலும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய சைவ சமயத்தில் அந்த முயற்சிகள் தோற்றுப்போகின்றன.

ஒரு காலத்தில் பசு வதைக்கு எதிராக நம்மவர்கள் இந்திய தேசம் சென்றதாக அறிகின்றோம். அந்நியர் ஆட்சியில் அவை நடந்தேறின.இலங்கையை ஆண்ட அந்நியர்கள் மாடு தின்பவர்களாக இருந்ததால் பசுவதை என்னும் கொடும் பாவம் நடந்தது.

ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பும் பசுவதையை முற்றாக தடுக்க முடியவில்லை என்றால், அது எங்கள் பலவீ னம் என்பதைத்தவிர வேறில்லை எனலாம்.

உலக மாதாவாக போற்றப்படும் பசுவை தமிழர்கள் தெய்வமாக போற்றினர். தாய்ப்பாலுக்கு அடுத்த படியாக பாசுப்பாலே எங்கள் ஆகாரமாகிறது. தவிர பசுப்பாலில் இருந்து கிடைக்கும் பஞ்சகெள யம் இறைவழிபாட்டுடனும் சைவ அனுட்டானத்துடனும் தொடர்புபட்டவை.

இவ்வாறாக பசுவை தாயாக, தெய்வமாக போற்றும் எங்கள் பண்பாடு தளர்வுற்று பசுவைக் கொன்று அதன் புலாலை உண்ணத் தலைப்பட்டுள்ளோம். இந்தக் கொடும்பாவம் எங்கள் வாழ்வை அமிழ்த்துகிறது. எங்கள் எழுச்சியை வீழ்த்துகிறது.

உலகு வாழ் உயிரினங்களில் அம்மா என்றழைக்கக்கூடிய பசுக்களும், எருதுகளும் எங்கள் செல்வங்கள்.எமக்கு பால் தந்து எங்களை வாழவைக்கும் கடவுளர்கள். ஆகையால் மாட்டினத்தைக் காப்பாற்றுவது எங்கள் தார்மீக கடமை.

இதற்காக இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.ஆமையைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம், மானை வேட்டையாடுவது பெருங்குற்றம், உடும்பை அடித்தால் அபராதத் தண்டம். ஆனால், அம்மா என்றழைத்து எங்களுக்கு பால் தந்து; நெய் தந்து; விவசாயம் செய்ய பசளை தந்து; நிலத்தையும் பண்படுத்த தன் உடல் உழைப்பைத்தரும் பசுவையும் எருதையும் கொன்று அதன் இறைச்சியை உண்பது பாவம் இல்லையா? எனினும் இது பற்றி நாம் சிந்திக்க தலைப்படாதது ஏன்?

ஆகவே, வட மாகாணத்திலேனும் மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதிப்போம். சிவபூமியாகிய எங்கள் மண்ணில் மாட்டிறச்சிக் கடைகளை முற்றாகத் தடுப்போம். இந்த முயற்சிக்கு சமயம் சார்ந்த சகோதர்களும் நிச்சயம் உதவுவர்.

ஆகையால், இந்த முயற்சியை முனைப்புடன் எடுத்து அதனை அமுலாக்க வேண்டும்.

மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று நம் தமிழ் மொழி பொருள் கொடுத்தது.ஒரு காலத்தில் எம் தமிழினத்தின் பெருஞ் செல்வமாக மாடுகளே இருந்தமையால் அப்படியொரு பொருள் கொடுக்கப்பட்டது எனலாம்.

அன்றல்ல இன்றும் மாடுகள் பெரும் செல்வங்களே! எத்தனையோ குடும்பங்களின் சீவியத்தை போக்குவது பசுக்களாக இருப்பதால் பசு வதையை - மாட்டிறைச்சியை முற்றாகத் தடுத்து பெரும் பாவத்தில் இருந்து விடுபடுவோம்.

மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாக இல்லாது செய்வோம் என்ற உறுதிமொழியை பட்டிப்பொங்கல் தினமாகிய இந்நன்நாளில் எடுத்துக் கொள்வோமாக.

- Valampuri  இந்தப் பத்திரிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்படுவதும், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத கருத்துக்களை கடந்த காலங்களில் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. இதில் என்ன எழிதியுள்ளார் என்று எழிதியவருக்காவது விளங்கியுள்ளதா?பசுவை கொள்ளாதே கீழ்சாதியை கொள் அல்லது வேற்றுமத மனிதனை நிம்மதியாக வாழவிடாதே இதுதான உங்கள் அன்பின் அடையாளம்!பசு பால்தருகின்றது ஆடு பால்தருகின்றது,கோழிமுட்டை தருகின்றது,ஏனைய மிருகங்கள் பலவகையான பிரையோஜனங்களை தருகின்றது இவைகளை கொள்வது அல்லது பசுமையாக சந்தோசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் செடிகொடிகளை வெட்டுவது இவைகளை பற்றி ஏன் நீங்கள் கதைக்கவில்லை? மேலும் மாடு என்றால் செல்வம் என்று எழிதியுள்ளீர் பல காளை மாடுகளை அடைந்தவர் எவ்வாறு தற்போதய காலத்தில் செல்வம் பெருவார் என்று விபரிக்கவும்.

    ReplyDelete
  2. இந்தியா இராணுவம் அட்டுழியம் பண்ணும் போதும். இலங்கை ராணுவம் போர் தொடுக்கும் போதும்.தங்களத்களுள் ஒறுவரை ஒருவர் சசுட்டுகொல்லும் போதும் அம்மா எங்கே.

    ReplyDelete
  3. மாட்டிறைச்சி வேண்டாம் வேண்டாம் என்று ஒப்பாரி வைக்கும் முட்டாள் தமிழன் தான் அதை அதிகமாகவும் சாப்பிடுகிறான். இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான நீங்கள் எப்படி இன்னொரு சிறுபான்மை சமுதாயத்தின் உணவு விடயத்தில் கை வைக்க முடியும்? நீங்கள் பன்றி உண்ணும்போது நாங்கள் வேண்டாம் என்று தடுப்பதில்லையே. இது சிவபூமியோ முருக பூமியோ இல்லை பௌத்த பூமி அவர்கள் இந்த விடயத்தை முடிவு செய்யட்டும்

    ReplyDelete
  4. இந்த தீவிரவாதிகளை நம்பி முஸ்லிம்கள் வடகிழக்கு இணைந்த சமஷ்டியை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். உலகிலையே அதிகாரங்கள் இல்லாமலே பேரினவாதத்தை திணிக்க நினைக்கும் ஒரே இனம் இந்த தோற்றுப்போன முட்டாள் தமிழினம் தான்

    ReplyDelete
  5. ஏன்டா நாய்களா பசு உங்க அம்மா என்றால் வீட்டில் வைத்து வழர்க வேண்டியதுதானே ஏன்டா ரோட்டில அலயவிடுரீங்க

    ReplyDelete
  6. உலகில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி யில் முதலாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா . இதில் முன்னிலையில் இருக்கும் நான்கு நிறுவனங்களும் பிரமணர்களினால் நிர்வகிக்கப் படுபவை.

    ReplyDelete
  7. மாட்டை அம்மா எனறும் தெய்வம் என்றும் சொல்ரீங்கல் ஆனால் அந்த கடவுலை அல்லது அம்மாவை ஏன் வன்டியில் கட்டி அதற்கு சுமக்க முடியா சுமையை அதன்மேல் ஏற்றி அதன் முதுகில் அடித்து அடித்து சித்திறவதை செய்வதைப்பற்றி சைவ மதம் என்ன சொல்கிறதூ

    ReplyDelete
  8. vealaillathavanum Valampurikku ARTICAL poddirkkan......naddila madayan athikamyittu.

    ReplyDelete
  9. Big BEEF exporter in India all are HINDUS no one muslims so ak them to stop first i agree Brother Riyal Abdullah & IR MS

    ReplyDelete
  10. கிழிச்சிங்க

    ReplyDelete

Powered by Blogger.