மைத்திரியிடம் கூறுமாறு, மகிந்த சொல்லியனுப்பிய தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஆட்சியில் இருக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் நடந்தது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்படி பிளவுப்படாமல் போட்டியிடுவது என்பது உட்பட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி,
இரவில் விழுந்த குழியில் பகலில் விழ எவரும் தயாரில்லை எனவும் நாட்டை அழிக்கும் முடிவுகளுக்கு கையை உயர்த்தும் கட்சியை பற்றி எண்ணாது, நாட்டை பற்றி சிந்திக்குமாறு தலைவர்களிடம் கூறுங்கள் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்துக்கு மாகாண முதலமைச்சர்கள் பதில் எதனையும் கூறவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடந்தும் வரை கட்சியுடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வர முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால், எந்த இணக்கப்பாடுகளும் இன்றி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதுடன் மீண்டும் சந்திப்பு நடைபெறுமா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
இரவிலோ பகலிலோ குழியில் விழும் அபாக்கியசாலியாக உங்களைப்பார்ப்பது சங்கடம்தான். என்ன செய்ய விழுந்தாலும் உங்களது பெரிய மீசையில் மண் பட்டதா? ஐயோ பாவம்.
ReplyDelete