வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவோம் - தினேஸ் சூளுரைத்தார்
நீதிக்கு புறம்பான தேசத்துரோகமான சட்டங்களை கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய ஐக்கிய தேசியக்கட்சி நினைக்கின்றது. நாம் இருக்கும் வரை அது ஒருபோதும் நடக்காது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் சுகததாச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து,
இந்த நாட்டை கூறு போடுவதற்கும் புதிய அரசியலமைப்பினூடாக சமஸ்டியை கொண்டுவந்து சர்வதேசத்துக்கு சார்பாக இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கும் கூட்டு எதிர்க்கட்சி ஒரு போதும் இடமளிக்காது எனவும் அறிவித்துள்ளார்.
நாட்டில் வேலைவாய்ப்பு தலைவிரித்தாடுகின்றது. படை வீரர்களை தண்டிக்க இந்த அரசு முனைப்பாக உள்ளது. நாட்டுக்கு சொந்தமான எல்லா வளங்களையும் தாரைவார்க்கின்றது. இதை தடுத்து நிறுத்தவும், கொடுங்கோண்மையான ரணில் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும் விமல் வீரவங்ச ஒருவரால் மட்டுமே முடியும்.
நாட்டின் சுயாதீனத்தையும் நீதித்துறையையும் குழிதோண்டி புதைத்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க வேடிக்கை காட்டுவதாகவும் இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னிலையில் தினேஸ் குணவர்தன சூளுரைத்தார்.
Post a Comment