Header Ads



றோ விடுத்த அழுத்தத்தை நிராகரித்தமையால், மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து

மஹிந்தவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு இந்தியாவின் “றோ” அமைப்பு விடுத்துள்ள அழுத்தத்திற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் றோ அமைப்பு விடுத்துள்ள இந்த அழுத்தத்தை நிராகரித்தமையால் மஹிந்த ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு தாம் தோற்று விடுவோம் என்ற பயமே காரணம் எனவும் அறிவித்துள்ளார்.

மஹிந்த தொடர்ந்து அரசியலில் இருப்பதே அரசுக்கு உள்ள பாரிய சவாலாகும். அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்றை மஹிந்த செய்துள்ளார். இதை கவனத்தில் எடுத்து “மஹிந்த அரசியலில் இருந்து விலகினால் தமது வாரிசுகள் மீதுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும்” என இந்தியாவின் றோ அமைப்பு அழுத்தத்தை பிரயோகித்தது.

எனினும் மஹிந்த இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அவரின் உயிருக்கு பாரிய ஆபத்து உள்ளது. இந்த அழுத்தத்திற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதி என்றுகூட பார்க்காமல் ஜோன் கெனடியை அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பு கொலை செய்தது என்பதையும் இதன்போது உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே அவருடைய உயிருக்கு பாரிய ஆபத்து உள்ளது. மஹிந்தவே இதை அடிக்கடி கூறி வருகின்றார். மஹிந்தவைப்போன்று திறமை மிக்கவர் கூட்டு எதிர்க்கட்சியில் வேறு எவரும் இல்லை. மஹிந்த இல்லையேல் எமக்கு பலமில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு எமக்கு சிம்மசொர்ப்பனமாக மஹிந்த இருக்கின்றார். இதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மஹிந்தவின் உயிரை தவிற வேறு எதுவும் இல்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.