மஹிந்தவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவோம் - அப்துல் சத்தார்
முஸ்லிம்களின் பங்களிப்புடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுகிறது. முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுடன் கைசேர்க்க வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
த்தரமுல்லை நெலும் பொக்குனவிலுள்ள முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
முஸ்லிம்களில் 98 வீதமானோர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். முஸ்லிம்களின் பங்களிப்புடனே ஆட்சி அமைத்தார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்த ஆட்சியில் இருந்தாலும் சமுதாயத்தை ஏமாற்ற முடியாது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குளவி கொட்டியது போன்ற வேதனையால் பறப்பதற்கு பல திசைகளில் ஓடித்திரிகிறார்கள்.
அவர்கள் ஏற்படுத்திய அரசு அவர்களிற்கே செவிசாய்த்ததில்லை. அதனால் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக கூட்டம் கூடித் தமது எதிர்காலம் பற்றி தீர்மானிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான அப்துல் சத்தார் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதாகவும் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னிலைப்படுத்தி வருகிறது.
தொல்பொருள் ஆய்வு எனக்கூறி பழைமை வாய்ந்த முஸ்லிம் பள்ளிகள் டோசர் பண்ணப்படுகின்றன. முஸ்லிம்களின் பொருளாதாரம் குறிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
வில்பத்து முஸ்லிம்கள் மீள்குடியேறிய அவர்களது காணிகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வில்பத்துவை இலங்கையின் ஜெருசலம் என்றே கூறவேண்டும்.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அளுத்கம வன்செயல்கள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கும்படி கூறியும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி தனது மக்கள் பலத்தினை நிரூபிப்பார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றி கொண்டு நாம் பின்பு வரும் பொதுத் தேர்தலிலும் சாதனை படைப்போம்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவோம் என்றார்.
ARA.Fareel
May allah guide our politicians
ReplyDeleteஅவர் ஆட்சியில் உங்களுக்கே கிடையாது.
ReplyDeleteMahinda unakku panam taruwan patavi taruwan. ANALUM Aduththa muslim makkalai padavikku wandal pali wanguwan.ALUTHGAMA kalawaraththil muslimgal kollappattatu mahinda wukku teriyatham.awan janadipati yaha irundatu SRILANKAWA ALLATU SOMALIYAWA? MUSLIMGALAI MADAYAN ENDRU NINAIKKIRAN .
ReplyDeleteவழங்கினாரா என்று பாருங்கள்.
ReplyDeleteஅவர் வழங்கிய பாதுகாப்பால் தான் நாம் எமது சகோதரர்களை அழுத்கமயில் இழந்தோம்.
ReplyDeleteWe Muslims Keep TRUST in ALLAH and GOOD people who stick to the way of ISLAM only.
ReplyDeleteBUT not those who play with politics.
May Allah GUIDE All of us in correct path.. If their is not guidance to any one.. May Allah protect the Muslims from them.
ennamum maaa?
ReplyDeleteIs abdul saththar a joker?
ReplyDeleteசிலர் உள்ளம் இருந்தும் உதணர்வில்லாதவர்களாகவும் கண் இருந்தும் குருடர்களாகவும்.காது இருந்தும் செவிடர்களாகவும் இருக்கிறார்கள் இவர்கள் மிருகங்கள் போன்றும் இல்லை அதைவிட கேடுகெட்டவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்,
ReplyDelete