சிலைகளால் எழுந்துள்ள அச்சம்
(விடிவெள்ளி பத்திரிகையின், ஆசிரியர் தலையங்கம்)
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கெலிஓய நிவ்எல்பிட்டிய எனும் பிரதேசத்தில் தக்கியா ஒன்றுக்கு அருகிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணிக்கருகில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவோடிரவாக பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினைக் கொண்டு வைத்துள்ளனர்.
முஸ்லிம்களே நூறு வீதம் வாழும் இப்பகுதியில், முஸ்லிம்கள் அருகிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுடன் நல்லுறவுடன் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் இவ்வாறு சிலை வைக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சிலை வைப்புச் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மத்திய மாகாணத்திலும் முஸ்லிம்களின் காணிக்கருகில் இவ்வாறு சிலை வைக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட ஆக்கிரமிப்புச் செயலா எனும் கேள்வியை எழுப்புகிறது.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில் பிரதேச அரசியல்வாதிகளும் பொலிசாரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை.
பொலிசாரினால் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பிரதேச சபை மூலமாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன் கலந்துரையாடி தீர்வொன்றைக் காணவுள்ளதாக முஸ்லிம் சமய விவாகர அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும் அண்மைக் காலமாக அரசாங்கத்தின் அனுசரணையுடன் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்புத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறதா எனும் கேள்வி பரவலாக எழுகிறது.
ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் இறக்காமம் மலையில் சிலை வைக்கப்பட்டு இன்னமும் அகற்றப்படவில்லை. பிரதேச சிங்கள அமைச்சர் ஒருவரின் பின்னணியிலேயே இச் சிலை வைக்கப்பட்டது.
அதன் பிற்பாடு அம்பாறை, பொத்தானை கிராமத்திலும் மட்டக்களப்பின் செங்கலடி பகுதியிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலத்தை பௌத்த தொல்பொருள் வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கு துணை போவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
எனவேதான் கெலிஓய உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இனங்களிடையே பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையிலான சிலை வைக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்
There's a message from Bloomberg to world investors
ReplyDeletethat Srilanka is a dangerous country to invest ! Why ?
Answer is simple ! Country is not yet peaceful .
we can show our power in coming local government election
ReplyDelete