Header Ads



ஜனாதிபதி எடுத்த முடிவினை, அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஹரீஸ்

வில்பத்து வனப் பிரதேசத்தை விஸ்தரிப்பதனால் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பல கிராமங்கள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி எடுத்த முடிவினை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை பாதுகாக்கும் வகையில் அதன் எல்லையை விஸ்தரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வனப் பிரதேசங்களை பாதுகாப்பதை வரவேற்கின்றோம் ஆனால் அதன் பெயரில் முஸ்லிம் கிராமங்களை குறிவைத்து காணிகள் அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கௌ;ள முடியாது. வில்பத்து பிரதேசத்தை அண்மித்து காணப்படும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம் பூர்வீக கிராமங்களான பாலைக்குளி, மறிச்சிக்கட்டி, கரடிக்குளி போன்ற கிராமங்கள் வில்பத்து வன எல்லை விஸ்தரிப்பினால் அபகரிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

இலங்கையில் நடைபெற்ற கடந்தகால யுத்தத்தின்போது இப்பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டார்கள். இதனால் பல்வேறு பிரதேசங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள். யுத்த முடிவின் பின்னர் நிலவும் அச்சமற்ற தற்போதைய சூழ்நிலையில் தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர். இதனை இனவாதக் கண்கொண்டு தடுக்கும் வகையில் செயற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமங்களை அபகரிப்பதை ஒரு இனவாதச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. யுத்தத்தின் அவலங்களை அனுபவித்த இம்மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தமது இடங்களை நாடிவருகின்றபோது அவர்களை மீள்குடியேற்ற காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காது பொடுபோக்குத் தனமாக செயற்படுகின்றனர்.

கடந்த மஹிந்த அரசின் தொடர்;ச்சியான இனவாத செயற்பாட்டால் அவரின் அரசின் மீது நம்பிக்கை இழந்த முஸ்லிம்கள் இவ்வரசை உருவாக்குவதற்காக பெரும் ஆதரவு வழங்கினர். இருந்த போதிலும் 'பழைய குருடி கதவைத் திறடி' எனக்கூறுவது போல் இந்த நல்லாட்சி அரசிலும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிராக முடிக்கிவிடப்படுகிறது.

நல்லாட்சி அரசை உருவாக்கிய முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் அக்கறை செலுத்தாது ஜனாதிபதி  குறித்த விடயம் தொடர்பாக அதிக அக்கறை காட்டுவது வியப்பாகவுள்ளதுடன் இந்நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.  

வில்பத்து விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ அல்லது அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, நியாயமான முறையில் இம்மக்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்;.

8 comments:

  1. முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் உரிமை போராளிகள். இந்த செய்தியை பார்த்த ஜனாதிபதியும், பிரதமரும் தம்பி ஹாரிஸை அழைத்து பேச்சு நடத்துவார்கள். ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு கவலை இது ஹன்சாட்டில் ( hansard) வராது. பரவாயில்லை நிட்சயம் அடுத்த முறையும் உங்களுக்கு தான் வாக்களிப்போம். கல்முனையின் சிங்கம். முஸ்லிம்களின் ( முஸ்லீம் காங்கிரசின் ) எதிர்கால தலைவர்.

    ReplyDelete
  2. All these are happening for Muslims after you guys started politics.Tell this to your boss Rauf

    ReplyDelete
  3. வில்பத்து பிரச்சினை அல்லது தற்போது ஏற்பட்டுள்ள முசலி பிரச்சினையோ இல்லை என்றாலும் ஏதாவது வேறு பிரச்சினை ஒன்றை திட்டமிட்டு உருவாக்கி முஸ்லிம்களை குழப்ப நிலையை உருவாக்கி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் பகைமையை உண்டுபண்ணி முஸ்லிம்களையும் பலவாறாக பிரித்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சின்னாபின்னமாக்கீ அதில் குளிர் காய்வதுதான் இந்த பேரினவாத அரசாங்கத்தின் பிரதான வேலையாக இருக்கிறது மட்டுமல்லாமல் அவார்களின் தலையாய கடமையாக ஆக்கீக்கொண்டார்கள்,இதை எமது சமூகமும் தலைவர்களும் புரியாமல் ஆளுக்கொரு மேடை போட்டுக்கொண்டு ஆளாளை வசை பாடுகின்றார்கள்,(ஒரு சமுதாயம் திருந்த முயற்சிக்காத வரை அல்லாஹ் அவர்களை திருத்தமாட்டான் அவர்களின் வழியில் விட்டு விடுகிறான்)அவ்வாறு அல்லாஹ் விட்டு விட்டால் சமூதாயத்தின் எதிர்காலம் என்னவாகும்,நம் சமூதாயத்தை ஒன்றுபடுத்த பலமான புத்தி ஜீவிகள், ஒன்றிணைந்துமுயற்சியில் இறங்க வேண்டும் இதுவே இன்றைய காலத்தின் தேவை.

    ReplyDelete
  4. சகோதர்ரே! நீங்கலெல்லாம் வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி முடிவை மாற்றுவது இருக்கட்டும். முதலில் நீங்கள் அறிக்கை விடுவதை கைவிடுங்கள். சமூகம் தடம்புறளாமல் இருக்க அதுவே போதும். சிவில் சமூகம் மற்றய விடயங்களைப் பார்த்துக்கொள்ளும்.
    முகத்தை துடைத்துக்கொள்ளுங்க கொஞ்சம் அசடுவழியிது.
    நீங்களும் உங்களது கட்சியும் அதுக்கொரு தலைவன். ஏண்டா எங்கள வித்துப்பொளக்கயள். போங்கடா

    ReplyDelete
  5. ஊமை ஊரைக் கொள்ளும் என்பார்கள்.

    ReplyDelete
  6. best of luck.dnt wory we a with u.

    ReplyDelete
  7. poradovom Muslims makkalukkaha.kdaisi varai poradovom.

    ReplyDelete
  8. best of luck.dnt wory we a with u.

    ReplyDelete

Powered by Blogger.