'எழில்மிகு இலங்கைக்கு, வரவிருக்கும் சோதனை'
-Mohamed Imran-
இரண்டு முரணான செய்திகளை ஒரே பக்கத்தில் பார்த்தேன் ஒன்று இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் வரட்சிக்கு உதவுமாறும் அதாவது தற்போது வரட்சி காரணமாக 49, 688 மக்கள் பதிக்கப்ட்டுள்ளதாக அனர்த்த முகாமைக்கான மையத்தின் தகவல்கள் சுட்டிகாட்டுகின்றன.
அதே நேரம் இலங்கையை ஓர் உற்பத்தி மையமாக பயன்படுத்த முடியும் இதன் மூலம் இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய முடியும் - coca cola நிறுவனத்தின் ஆசிய பசுபிக் நிறுவனத்தின் தலைவர் john murphy கூறுகிறார் .
இது இலங்கைக்கு சுபீட்சமான செய்தியாக கூறுகிறார் நமது நிதியமைச்சர். உண்மையில் இலங்கைக்கு கணிசமான அளவு அந்நிய செலவாணி வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குவதில் எந்த ஐயமுமில்லை அப்படி எ\ன்றால் இது இலங்கைக்கு வரப்பிரசாதமா ? முன் கூறிய வரட்சிக்கும் இதற்கும் ஏதும் தொடர்புண்டா ?
coca cola நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவுக்கு ஏன் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யவேண்டும்? .இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நிகழ்ந்த கடந்தகால நிகழ்வுகள் இதற்கு விடையளிக்கிறது.
• 2005 ல் கேரளாவில் உள்ள coca cola உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டமை .
• பதினைந்து வருட வாரணாசியில் உள்ள தொழிற்சாலை மூடப்பட்டமை.
• 2015 இல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு சம்பவங்கள்.
இதற்கு பின்னல் உள்ள மிகப்பிரதான காரணி இந்நிறுவனத்தின் உச்ச அளவிலான நீர் பயன்பாடு ஆகும். The Water Foot Print Network இன் ஆய்வின் பிரகாரம் ஒரு லீட்டர் coca cola உற்பத்தி செயய்வதற்கு அதன் உற்பத்தியை முறையின் பிரகாரம் 442-618 லீட்டர் நீர் பயன்படுத்த படுகிறது இப்போது புரிகிறதா எழில் மிகுந்த இலங்கையின் நீர்வளங்களுக்கும் அதை நம்பியுள்ள விவசாயிகளுக்கும் வர இருக்கும் சோதனை!!! ,
இந்த நல்லாட்சி அரசின் அளவுகோளின் படி இது நல்லாட்சியின் வாய்ப்பாக கூட நிறுவலாம் பல பில்லியங்களுக்காக சில சில்லறை விவசாயிகள் ஒன்றும் பெரிதாக தெரிய போவதில்லை .
புரிந்து கொள்ளுங்கள்!! நல்லாட்சி என்பது மனிதன் ஆளப்படவேண்டிய மனித குலத்திற்கே அருளாக வந்த நீதியான சித்தாந்தங்களை கொண்டே முடியுமேயன்றி வேறு எவற்றாலும் நிறுவப்பட முடியாது.
Its wrong. They need about 3 - 9 litre of pure water to make one litre of Coke.
ReplyDeleteThere no any wrong if come COCA COLA company Sri lanka and make big production.Some monkeys against that but my oppinion that so positives and bring more jobs.
ReplyDeleteநாட்டில் கொகாகோலா பாவனை அதிகரிக்கப்பட்டால் வைத்தியசாலையின் தேவையும் அதிகரிக்கப்படும்
ReplyDelete