முஸ்லிம் சிறுவனை மதம், மாற்றியது தவறானது - விஜித தேரர்
திம்பலாகலயில் முஸ்லிம் சிறுவன் ஒருவன் தாயாரது அனுமதி பெற்றுக்கொள்ளப்படாது அவர் வெளிநாட்டில் இருக்கும் போது பௌத்த மதத்துக்கு மதம் மாற்றப்பட்டமை தவறானதாகும்.
பெற்றோரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டே மதம் மாற்றம் இடம்பெற வேண்டும் என புத்தபெருமான் கூறியுள்ளார். இச்சிறுவனின் விடயத்தில் சிறுவனின் தந்தையே ஏதோ ஒரு காரணத்திற்காக சிறுவனை திம்புலாகல துறவிகள் ஆசிரமத்தில் ஒப்படைத்துள்ளார் என ஜாதிக பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வட்டரக்க விஜித தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திம்புலாகலையைச் சேர்ந்த இஸ்மாயில் அஸ்லம் எனும் பெயருடைய 7 வயது சிறுவன் தனது தந்தை ஹமீட் இஸ்மாயிலினால் திம்புலாகல துறவிகள் ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அச்சிறுவன் பௌத்த மதத்துக்கு மதம் மாற்றப்பட்டுள்ளார். அவரது ஸ்ரீ சுதர்சனாலங்கார என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்டரக்க விஜிததேரர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
முஸ்லிம்கள் பௌத்த சிறுவர்களை அவர்களது அறியாப் பருவத்தில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றுகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் தேரர்கள் இவ்வாறு ஒன்றும் அறியாத சிறுவன் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டான் என்பதற்காக மதம் மாற்றியமை தவறாகும்.
உண்மையில் அவர்கள் சிறுவனுக்கு கல்வி கற்பதற்கான உதவிகளை வழங்கி வசதிகளையே செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மதம் மாற்றியமை புத்தசாசனத்துக்கு மாறானதாகும். எந்த சமயத்திலும் இவ்வாறான மதமாற்றங்கள் இந்தச் சிறுவயதில் இடம்பெறக்கூடாது.
இந்த மதமாற்றம் தேசிய ஐக்கியத்துக்காக மேற்கொள்ளப்பட்டது என்று சம்பந்தப்பட்ட தேரர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செய்கைகள் தேசிய ஐக்கியத்தை வளர்க்காது. மாறாக இன விரிசலையே ஏற்படுத்தும் என்றார்.
ARA.Fareel
allah இவரது உள்ளத்தில் ....
ReplyDelete