வெளிநாடு செல்வதில் ஆண்கள் முதலிடம், சவூதிக்கு செல்வதில் பெண்கள் முன்னிலை
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் தேடி செல்லும் பெண்களின் வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண்களின் வீதம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,
2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரையான ஒருவருட காலப்பகுதியில் ஆண்கள் பெண்கள் என 4 இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
இவர்களில் 172,780 பெண்களும் 231,634 ஆண்களும் சென்றுள்ளனர்.
இதில் பெண்களில் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவுக்கே பணிப்பெண்களாக சென்றுள்ளனர்.
எனினும் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டு பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் 38 வீதம் வரை குறைவடைந்துள்ளது. எனினும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் தொழில் வாய்ப்புக்கள் எற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்கள் செல்லும் வீதம் மேலும் குறைவடையும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
Post a Comment