யாழ்ப்பாணம் ஓஸ்மானியாவின் கல்வியும், பள்ளமும்
-அபூ அதாஸ்-
1963 ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பிக்கப் பட்ட பின்னர் அதன் கல்வித் துறை முன்னேற்றப் பாதையில் சென்று பல கல்வி மான்களையும் பட்டதாரிகளையும் சமூக சேவகர்களையும் புகழ் பெற்ற வியாபாரிகளையும் புகழ்பெறாவிட்டாலும் மற்றவரிடம் கையேந்தாமல் தன்னுடைய குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லும் அளவுக்கு உழைக்கக் கூடிய உழைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளது.
1990 வெளியேற்றம் எமது இந்த முன்னேற்றத்தில் சிறு பின்னடைவை ஏற்படுத்தினாலும் விழித்துக் கொண்ட எமது சமுதாயம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வீறுநடை போட்டு நாம் முன்னர் சாதிக்காததை எல்லாம் சாதித்துள்ளது. இன்று 30 இக்கும் மேற்பட்ட வைத்தியட்களையும் 20 இக்கும் மேற்பட்ட எஞ்சினியர்களையும் 8 இக்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்களும் இன்னும் பலதுறை வல்லுனர்களும் 1990 வெளியேற்றத்தின் பின்னால் உருவாகியுள்ளனர்.
2003 இல் மீண்டும் ஒஸ்மானியா ஆரம்பிக்கப் பட்ட பின்னர் 150 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 275 ஆகி, 350 ஆகி 400ஐத் தாண்டியது. பிறகு ஹதீஜா பெண்கலுக்கென்று வேறாக்கப் பட்ட பின்னர் தற்போது ஏறக் குறைய 400 மாணவர்கள் ஒஸ்மானியாவில் கற்கின்றனர். (உள்ளிடுகை தேவை).
2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு அனுமதியில் 38 மாணவர்களே சேர்ந்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டு 42 ஆக இருந்தது. எங்களுடைய காலத்தில் 60 முதல் 70 வரை இருந்தது. அதே வேளை யாழின் பிரபல பாடசாலையொன்றுக்கு கடந்த காலங்களில் இரண்டு மூன்று முஸ்லிம் மாணவர்களே சென்றனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை 20 ஐத் தாண்டியுள்ளது. மேலும் ஏணைய பாடசாலைகளில் மேலும் பத்துப் பேர் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இது ஒஸ்மானியாவின் கல்வித் தரத்தில் நம்பிக்கை இழப்பு அதிகரித்துச் செல்லுவதைக் காட்டுகின்றதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. முபாரக் மௌலவியின் நிர்வாகம் சரியில்லை என்று இரவோடிரவாக அவரை மாற்றியவர்கள் அவரை மாற்ற வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவர்கள் எல்லோரும் இது பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் 70 வீதமான பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் , அதிபர் பிரச்சினை, கல்விபின்னடைவுகள் காணப் படுகின்றன. அவர்களெல்லாம் இப்படி அதிபரை மாற்ற ஒற்றைக் காலில் நின்றிருந்தால் எங்கிருந்து அதிபர்களை தருவிக்க முடியும்.
ஒஸ்மானியாவில் நம்பிக்கையீனம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் அதிபர் மாற்றுகையும் தற்போதைய அதிபருக்கு தேவையற்ற வகையில் கொடுக்கப் படும் அழுத்தங்களே என்றால் மிகையாகாது. எல்லா நடிகற்களும் சிவாஜியுமல்ல, எல்லா அதிபர்களும் ஹாமீம் அவர்களுமல்ல. அந்தக் காலத்தில் நல்ல பெற்றோர்கள் நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்கள் நல்ல சூழ்நிலை. இப்போது அப்படியில்லையே. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒஸ்மானியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உதைப் பந்தாட்டம் விளையாடவே ஆட்கள் போதாது. இன்நிலையில் பள்ளத்தை பல இலட்சம் செலவில் நிரப்பி அங்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் அமைக்கப் போகிறார்களாம். ஒஸ்மானியாவின் ஜின்னா மைதானத்தைச் சுற்றி மதில் போடப் போகிறார்களாம். மழை அத்திப் பிட்டியில் பேய சிலர் ஜின்னா மைதானத்தின் பள்ளத்துக்குள் நின்று கொண்டு குடை பிடிக்கின்றனர். அந்தப் பள்ளத்துக்குள் செல்ல வேண்டிய அவசியமோ அவசரமோ இப்போது இல்லையே. யாரோ சில தனவந்தர்கள் செய்வதாக சொல்லி உலகம் முழுக்க உள்ள யாழ்ப்பாணத்தவரின் 300,000 பணத்தை அந்த பள்ளம் ஏப்பம் விடுகின்றது. எந்தத் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பதென்ற தெளிவு மக்களிடம் இருக்க வேண்டும். சிலர் தாம் தான் இந்த வேலையைச் செய்தோம் என்று படங்காட்ட அதை நம்பிய வெளிநாட்டிலுள்ளவர்கள் அள்ளிக் கொட்ட பணம் பள்ளத்தில் விழுகின்றது. இதற்குத்தான் ஹரீஸ் எம் பி 50 இலட்சம் தருவதாக சொன்னாரே? அஸ்மின் ஐயூப் பத்து இலட்சம் ஒதுக்கியுள்ளாரே? நம்ம செல்வந்தர்கள் மூன்று இலட்சம் ஒதுக்கியுள்ளனராமே? எங்கே செல்லுகின்றது எமது சமூகம்.
இயங்குகின்ற ஒஸ்மானியாவிலும் ஹதீஜாவிலும் பல்வேறு குறைபாடுகள் காணப் படுகின்றன. திறமையான ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது,. படிப்பில் அக்கறை கொண்ட மாணவர்கள் குறைவாகவே உள்ளனர்.
இதற்கெல்லாம் பகுதி நேர தனியார் ஆசிரியர்களை எடுத்து சிறந்த கல்வியை வழங்க முடியும். இன்று எத்தனையோ திறமைசாலிகள் யாழ்ப்பானத்தில் உள்ளனர். அவர்களை பாடசாலை உபயோகப் படுத்தலாம். அப்படியில்லாவிட்டால் பல்கலைக் கழக மாணவர்களை பகுதி நேர ஆசிரியர்களாக பயன்படுத்தலாம். இதனூடாக ஒஸ்மானியாவில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படும்.
இவற்றை செயற்படுத்த பூனைக்குட்டி தான் அவசியம். அது என்ன பூனைக் குட்டியென்று பார்க்கின்றீர்களா? அது தான் பணம்.
இந்த பணத்தை தற்போதைக்கு தேவையற்ற பள்ளத்தை நிரப்பவும், தற்போதைக்கு தேவையற்ற சுற்றுமதில் போடவும் பயன்படுத்துபவர்கள் ஒஸ்மானியாவின் கல்வி வளர்ச்சி நிதிக்கு உதவி செய்ய முடியும். அதற்கான திட்டங்களை வகுக்க முடியும்.
Muslimkalin Kalvi valarchikku thadaiyaha Ulla kodarikambuhaluku savumani adikka vendum
ReplyDelete