பள்ளிவாசலுக்கு தமிழ் எம்.பி. தீ வைத்தாரா..? (களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் வீடியோ)
-அஹமட் இர்ஷாட்-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று- செங்கலடி பிரதேச செயலகம் பிரதேச சபை, நிருவாக எல்லைகளுக்கு உட்பட்ட தன்னாமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் உள்ள மீள் குடியேற்ற பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் யுத்தகாலங்களில் கைவிடப்பட்ட காணிகளை மீண்டும் வேலிகள் அமைத்து அடைத்துக்கொண்டிருந்த பொழுது அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினரும், அவருடைய ஆதரவாளர்களும் வேலிகளை உடைத்து அங்கு தொழுகைக்காக தற்காலிகமாக கட்டப்படிருந்த பள்ளிவாயலினை தீவைத்து கொழுத்தியதாக முக நூல்களிலே புகைப்படங்களுடன் செய்திகளாக நேற்று முந்தினம் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு முற்றிலும் எதிராக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேற்குறித்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை அவருடைய மட்டக்களப்பு அலுவலகத்தில் சந்தித்து வினவிய பொழுது குறித்த சம்பவத்தினை முற்றாக மறுத்த பாராளுமன்ற உறுப்பினர், தான் ஒரு மக்கள் பிரதி நிதி என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை முஸ்லிம் தரப்பினால் அத்து மீறி அடைகப்படுவதாகவும், குறித்த இடத்தில் முஸ்லிம் தரப்பினருக்கும், தமிழ் தரப்பினருக்கும் இடையில் இன முறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தனக்கு அறிய கிடைத்தமையினாலுமே குறித்த பிரதேசத்திற்கு தான் விஜயம் செய்ததாக தெரிவித்தார்.
மேலும் நாங்கள் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு அங்கு சென்றிருந்தால் எதற்காக அங்கு அரச, தனியார் ஊடகங்களையும் மற்றும் பிரதேச செயலாளர், அதிகாரிகளை வரவழைத்து நாங்கள் அங்கு விஜயத்தினை மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே இதிலிருந்து குறிப்பிட்ட விடயத்தினை முக நூல்களிலே உண்மைக்கு புறம்பான முறையில் செய்திகளாக பதிவேற்றி என்னுடைய அரசியல் முன்னெடுப்புக்களுக்கும், தனிப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் விளைக்கும் வகையிலே குறித்த காணியினை அடைத்து தன்னிச்சையாக சமூகங்களுக்கிடையில் இன முறுகலை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டுவரும் குறித்த தனி நபரினுடைய செயலாக மேற்குறித்த விடயத்தினை பார்ப்பதாக தெரிவித்தார்.
அத்தோடு, தானும் தனது ஆதரவாளர்களும் அங்கு தற்காலிகமாக கட்டபட்டிருந்த பள்ளிவாயலினை எரித்ததாகவும், அங்கு ஒருதருக்கு தாங்கள் தாக்கி அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டிருப்பது சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான முறையில் பரப்பப்பட்டு வருகின்ற விடயத்தினை அறிந்து ஏறாவூர் பள்ளிவாயல் சம்மேளனத்துடன் கலந்துரையாடி தனது பக்க நியாயங்களை விளக்கியுள்ளதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஏறாவூர் பிரதேசத்தின் அரசியல் தலைமையான அலி-ஷாஹிர் மெளலானாவுடனும் கலந்துரையாடியாக தெரிவித்தார்.
இவ்வாறு உண்மைக்கு புறம்பான விடயங்களை பரப்பி இன முறுகலினை ஏற்படுத்தும் வகையில் முக நூல்களிளே செய்திகளாக பிரசுரித்து தனக்கு எதிராக அரசியல் சாயம் பூச நினைக்கும் புல்லுருவிகளை முஸ்லிம் சமூகம் இனம் கண்டு தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் மாவட்டத்தில் ஒற்றுமையுடன் தங்களினுடைய உரிமைகளை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து வென்றெடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார். தான் ஏறாவூர் பிரதேசத்தில் வசித்தவன் என்ற வகையிலும், ஏறாவூர் மக்கள் தனக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள் என்ற ரீதியிலும் குறித்த விடயம் சம்பந்தமாகவும், மக்களை தெளிவுபடுத்தும் முகமாகவும் கலந்துரையாடல்களுக்கு எங்கும் வரத்தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு தனது பக்க நியாயங்களை தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் ஒரு புறமிருக்க,, இருப்பக்க நியாயங்களையும் சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் வகையில் குறித்த சம்பவம் இடம் பெற்ற பிரதேசத்திற்கும் நேரடியாக விஜயம் செய்து அங்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற நபர்களிடம் கேட்கப்பட்ட விரிவான கேள்விகளுக்கான பதில்களுடன், வியாழேந்திரன் எம்.பி.யின் தெளிவான கருத்துக்கள் அடங்கிய காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ
Post a Comment