சேறுபூச வேண்டாம் என்றார் சபாநாயகர், திருடனை திருடன் என்பேன் என்றார் அனுரகுமார
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் தற்போது ஆரம்பமானது.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்றுக்காலை 9:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை ஒத்திவைக்கப்பட்டது. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்றிரவு 7:30 மணிவரையிலும் இடம்பெறும். விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சகல உறுப்பினர்களுக்கும் அறிவுரை வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விவாதத்தை மிகவும் ஆரோக்கியமானதாகவும் தனிநபருக்கு சேறுபூச வேண்டாம் என்றும் சகல உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
விவாதத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, சபாநாயகர்கள் அவர்களே! திருடனை, நான் திருடன் எனக்கூறியே விவாதத்தை ஆரம்பித்தார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், ஒரு தரப்பினரிடம் மட்டுமே நான் வினயமாகக் கேட்டுக்கொள்ளவில்லை. சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டேன் என்றார்.
Post a Comment