பிக்குணியின் பின்னணியில் உதய கம்மன்பில
தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பௌத்த பிக்குணி நேற்று உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு திருத்தம் மூலம் நாட்டைப் பிரிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக கூறி, இந்த பௌத்த பிக்குணி நேற்றுமுன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
எனினும், இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் இவர் தனது பெயர் உள்ளிட்ட விபரங்களை மருத்துவர்களுக்கு வெளியிட மறுத்துள்ளார்.
அதேவேளை, இந்த பிக்குணி உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவுடன் தொடர்புடையவர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பிக்குணி தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், கிரியுல்லவில் இருந்து இவர் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
Post a Comment