Header Ads



தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம்
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக என்று பிரார்த்திக்கின்றோம்.

எதிர்வரும் 04.02.2017 சனிக்கிழமை எமது நாடு தனது 69வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றது. 

சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதில் நமது சமூகம் அதிக பங்களிப்புச் செய்துள்ளது என்பதையும் நமது சமய, சமூக, அரசியல் தலைமைகள் அன்று தொட்டு இன்று வரை நாட்டுப் பற்றோடு செயற்பட்டுள்ளனர். இன்றும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர் என்பதையும், இந்நாட்டு முஸ்லிம்கள் பிரிவினைவாத செயற்பாடுகளிலோ, சமய நிந்தனைகளிலோ, சமய சண்டைகளிலோ ஈடுபடாதவர்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பமாக இவ்வருட சுதந்திர தின விழா அமைய வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.  

அத்துடன் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அது சம்பந்தமான நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் மாற்று மத சகோதரர்களுடன் சந்திப்புகள் போன்றவற்றை நடத்துவதோடு; எமது நாட்டின் தேசியக் கொடியை தத்தமது இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வியாபார நிலையங்களிலும் ஏற்றுமாறும் சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொளகின்றது. அதே நேரம் பொது வேலைத் திட்டங்கள், சிரமதானங்கள் போன்றவற்றில் அயலில் வாழும் மாற்று மதத்தவர்களையும் இணைத்துக் கொள்வது சமூக சகவாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதையும் ஜம்இய்யா நினைவு படுத்திக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்!


அஷ்.-ஷைக் எச்.உமர்தீன்
செயலாளர்- பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

7 comments:

  1. ஆம் மாஷா அல்லாஹ் வரவேற்கிறோம்.
    அதன் படி செய்வோம்.
    நாட்டின் சுதந்திர தினத்திற்கு நம் நாட்டு சிங்க உருவம் போட்ட கொடியை ஏற்றுவதற்க்கு ஜம்இய்யதுல் உலமா ஏற்றுக்கொள்வதென்றால் ???
    ஏன் உலகத்த்ற்கே ரஹ்மத்தாக அனுப்பப்பட்ட கன்மனி முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாமின் விசேஷமாக பிறந்த தினத்தில்
    உலகமே சந்தோசப்படும் நாளில் (லாஇலாக இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹீ என்று எளுதப்பட்ட கொடியை, அல்லது ஸலவாத் எலுதப்பட்ட கொடியை ,அல்லது பிறை போடப்பட்ட கொடியை ஏற்றுமாரு ஏன் அறிவிக்ககூடாது.
    உலகத்தில் ஆட்சி அதிகாரம் .நீதி நியாயம் ,நேர்மை,கண்ணியம், ஐக்கியம் ,குடும்பம்,என்பவற்றையெல்லாம் கற்றுத்தந்த மாபெரும் சுதந்திற்க்கு அன்னலாரை நினைவு கூருவதையிட்டு கொடிகலை அந்நாளில் பறக்கவிட்டு அன்னலாரின் அழகிய குணங்களை ,அழகிய வாழ்க்கைகளை அன்னியவர்களும் புரிந்து கொள்ளும் முகமாக நம் கொடியை ஏற்றுவதற்க்கு ஜம்இய்யதுல் உலமா மெளனம் சாதிப்பது ஏன்.
    இனியாவது அன்னல் கன்மனி முஹம்மதே முஸதபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாமின் பிறந்த தினத்தை கண்ணியப்படுத்த நம் வாழக்கையில் ஒவ்வொரு சுதந்திர வெற்றியைக் காட்டித்தந்த அந்த ரபீஉல் அவ்வலில் உலமா சபை நாட்டு மக்களுக்கு அண்ணலாரின் மகிமையை அனனியவர்களும் அறிந்து கொள்ள் கொடிகலை ஏற்றுமாரு அறிவிப்பு கொடுப்பார்கலா?
    அல்லது அவைகல் ஷிர்கு என்பார்கலா? பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. PLEASE CHANGE THE NAME OR KINDLY LEARN REAL ISLAM

    ReplyDelete
  3. Fataawa al-Shaykh Ibn Baaz (1/320, 321).

    These are two useful answers from the Shaykh (may Allaah have mercy on him) about the comparison between Arab nationalism and Islam. The second answer contains the ruling on one who compares between them, and says that he is deranged or a blind follower or a bitter enemy of Islam.

    The one who knows nothing about the status of nationalism may be excused, But if a person is ignorant of Islam and believes that some other religion, system or principle is better than it, he is undoubtedly a kaafir.

    ReplyDelete
  4. This practice of raising the flag is not found in the Sunna of prophet and salf , So it Should be Bidaa according to the Wahhabi Methodology.

    ReplyDelete
  5. Mr Harroon, we have no problem in you following your own desires and not to follow the way of salaf ( sahaaba, tabieen and taba tabieens). You may follow soofees and end up in thier path. BUT We advice the muslims who really love to follow the way of Muhammed (sal) and his companions way.

    NOTE: There is no followers who claim that they are wahaabi but there are muslims who claim they follow the way of SALAF, But for you following SALAF is poision and following SOOFEE deviant leaders is sweet.

    For you your way... BUT for us the way of Muhammed (sal) and his companions way.

    MAy Allah guide you in the path of salaf us saliheens, which hadeess and quran invites for.

    ReplyDelete
  6. ACJU calling to celebrate the independance day... BUT Did we enjoy any independance especially under MARA rule and now in MY3 Rule ?

    For Mulims only two EIDS are to be celebrated not any other days.

    May Allah GUIDE ACJU and their so called Ulemas(?)

    ReplyDelete

Powered by Blogger.