பொய் சொன்ன, நிதி அமைச்சர்
நிபந்தனையின்றியே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு மீளவும் கிடைக்கப் பெற்றது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் அடிபணியாது வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்குவது குறித்து விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வமாக இந்த சலுகைத்திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
2
கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே, நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்க இணங்குவதாக ஐரோப்பிய ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஆட்சிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் பிரகடனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி உள்ளிட்ட 27 விடயங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியமான நிபந்தனைக்கு சிறிலங்கா இணங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
எனினும், இந்த சலுகையை மீள வழங்குவதனால், சிறிலங்கா 27 அனைத்துலக பிரகடனங்களை முற்றிலும் திருப்தியளிக்கும் வகையில் மதித்துச் செயற்படுகிறது என்று அர்த்தமில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் செல்லும். இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் இருந்தால், இந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டாலும், நிலையான அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.
Yahapalanaya means Blunder....
ReplyDeleteIf people of this country love to tell and hear and
ReplyDeletebelieve ONLY LIES ,then the national language
becomes LIES and the people liars . LET US ALL MAKE
IT THE OFFICIAL LANGUAGE !
The so-called minister is a consummate liar. I can remember that he pledged to set up a Muslim boys school in Kolonnowa within the same budget in his political propaganda. But still it never materialized.
ReplyDeleteThe so-called minister is a consummate liar. I can remember that he pledged to set up a Muslim boys school in Kolonnowa within the same budget in his political propaganda. But still it never materialized.
ReplyDelete