களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற, இரத்தினகல் உரிமையாளரை காணவில்லை
இரத்தினபுரியின் பிரபல இரத்தினகல் வர்த்தகரான நிமல் பத்திரன களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தற்போது வரையில் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணை மேற்கொள்ளப்பட்டவர்களுக்குள் நிமல் பத்திரன குடும்பத்தினர், களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த அறையின் நோயாளிகளும் உள்ளடங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக பொல்ஹேன்கொடவில் வசிக்கும் இரண்டாவது மனைவியின் மகளின் கணவரினால், நிமல் பத்திரன களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதியில் இருந்து அவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாராவது இந்த வர்த்தகரை கடத்தி சென்றுள்ளார்களா்? அப்படி இல்லை என்றால் இவரை யாராவது அழைத்து சென்று கொலை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் பல முறையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயனா - சார்ல்ஸ் திருமணம், அதன் பின்னர் வில்லியம் கேட் திருமணத்திற்கு பயன்படுத்திய நீல இரத்தினகல் மோதிரத்தின் உண்மையாக உரிமையாளர் இவராகும்.
அவரால் கொள்வனவு செய்யப்பட்ட இரத்தினகல் பலவற்றில் அதிகமானவை பிரித்தானிய மகாராணிக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது பரம்பரை சொத்தாக மாறியுள்ளது.
சமகாலத்தில் பிரித்தானியாவின் இளவரசியான கேட் அதற்கான உரிமையாளராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment