'புராதன பௌத்த சின்னங்களை வைத்து, அரசாங்கம் விளையாடுகிறது' - பசீர்
நல்லாட்சியின் ஒரு பகுதியினருக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல், மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்று நல்லாட்சியினர் விரும்புவதாகவும், வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத மற்றும் இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இந்த உணர்வூட்டலை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தவிசாளர் பசீர் கூறியுள்ளார்.
இதனை நிறைவேற்றுவதற்காக, சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்து, அங்கு பௌத்த புராதன சின்னங்களை கண்டுபிடிக்கும், ஒரு லாவக விளையாட்டினை மேற்கொண்டு வருதாகவும் தவிசாளர் பசீர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேலும் சிறிது காலம் சென்றதும் பௌத்த புராதன சின்னங்கள் என்ற புரளியைக் கிளப்பினர். இப்புரளி சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்தது.
வடக்கு கிழக்கு மண்ணைத் தோண்டி புராதன சின்னங்களை கண்டுபிடிப்பதை ஒரு வழியாக்கியுள்ளனர். மேலும், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களவர்களை பிராந்திய ரீதியான சிறுபான்மையினர் என்ற அரசியல் அடையாளத்துக்குள் கொண்டுவந்து – அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும், உடமைகளின் உரித்துக்காகவும் போராடுவது இதற்குரிய மற்றுமொரு சிறந்த வழி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பௌத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாகச் செயல்படுத்த மத அமைப்புகளும், அமைச்சர்களும், நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத அரசியல்வாதிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்செயற்பாடுகளால் கிளர்ந்தெழும் சிறுபான்மையினரை சாந்தப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க ஏற்கனவே சிறுபான்மை மக்கள் மீது அனுதாபம் கொண்டு பேசிவரும் சில சிங்கள அமைச்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.முஸ்லிம் அமைச்சர்களுக்கு பேசா மடந்தைகளாக இருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர – சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், நீதி – புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பௌத்த தீவிரவாத சக்திகளுக்கு தீனி போடவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் டிலான் பெரேரா, ராஜித சேனாரட்ன போன்றோர் சிறுபான்மையினரை சாந்தப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர். பௌத்த தீவிரவாத அமைப்புகள் எவை என்றும், பேசாதிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் யார் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள தீவிரவாத அரசியலானது, நேரடியாக தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ அரசியலை இலக்கு வைத்துள்ளது. இதனை எதிர்கொள்ள வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையும் தயார் நிலையில் இருப்பது போல் தெரிகிறது. தமிழ் மக்கள் பேரவை கிழக்கில் அதன் வேலைத்திட்டத்தை முன் வைத்திருப்பது இதற்கு சான்றாகும்.
ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் தங்களின் தெற்குத் தலைமைகளால் இது விடயத்தில் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.
புத்தளம் பள்ளிவாசலில் 70 களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது – முஸ்லிம் பிரதிநிதிகள் கல் போலக் கிடக்க, தந்தை செல்வா அதற்கெதிராகப் பேசினார். அம்பாறை முஸ்லிம்களின் காணிப் பறிப்பின் போது சிவகுமாரன் செயல்பட்டார். இவற்றினைப் போன்று, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும் என்று, தெற்கு முஸ்லிம் தலைமைகள் வாழாது இருக்கின்றனவா என்ன ? பாவம் கட்சி, அது மட்டும்தானே கிழக்கினுடையது.
66 ஆண்டுகளாக இருந்து வந்த முன்னைய அரசுகள் அனைத்தும் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்தன. ஆனால் இன்று அரசாங்கமே சிங்களத் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துள்ளது. இது பெரும் ஆபத்தானதாகும்.
இனி, ஞான சார தேரர் போன்றோர் மதங்களுக்கு எதிரான கருத்துக்களைக் குறைத்து, சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் கருத்துக்களையே மொழிவர். அவர் போன்றோரின் செயற்பாட்டுத் தளம் – தெற்கில் இருந்து வடக்கு கிழக்குக்கு மாறியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படக் கூடாது என்பது, இப்போது, இப்படிப்பட்டவர்களின் இலக்காகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக் கூடாது என்பது இவர்களின் கோசமாக உள்ளது.
இதனூடாக மாகாணங்களுக்கு தற்போது இருக்கும் குறைந்த பட்ச அதிகாரம்கூட வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளான சிங்கள ஆளுநர்களுக்கே இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது என்பதன் சூட்சுமத்தின் பின்னணி இதுதான். கடந்த 28 வருடங்களில் ஒரு வாரத்துக்காவது தமிழர் ஒருவரோ அல்லது ஒரு முஸ்லிமோ வடக்கு கிழக்கில் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. இந்த நடைமுறை சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த தந்திரமாகும்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அண்மையில் ஞானசாரர் மாகாண ஆளுநர்களின் அதிகாரம் குறைக்கப்படக் கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் எந்தக் கொம்பனாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரமுள்ள பிராந்திய ஜனாதிபதியாக செயல்படும் ஆளுநர்களிடமே மாகாண நிர்வாகம் உள்ளது.
“அந்தந்த மாகாணங்களில் வாழும் மக்களினால், மாகாண ஆளுநர்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்று, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கமானது, அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரட்டும் பார்க்கலாம்.
இத்திருத்தத்தை சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை ஏன் முன் வைக்கவில்லை என்று தெரியவில்லை. கட்டங்கட்டமாக அதிகாரத்தைப் பெற முயற்சித்திருக்கலாமே.
தமிழர்களும், முஸ்லிம்களும் வாங்கிக் கட்டிக் கொண்டு போகப் போகிறோமா இல்லை புரிந்து கொண்டு போராடப் போகிறோமா? சிறுபான்மை அரசியலை நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் மெத்தப் படித்தோர் ஆகிய முத்தரப்பும் கைப்பற்றி தன்னகத்தே வைத்துள்ளது. மக்கள் பிரக்ஞையுள்ள சிவில் சமூகத் தலைமைகளுக்கு அங்கு இடமில்லை.”தலை இருப்பவர்களுக்கு இடம் இல்லை, இடம் இருப்பவர்களுக்கு தலை இல்லை”.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am one of the guys who were very much inspired by your speeches when you were in Eelam Revolutionary Organization of Students. Recently I came across one of your speech which was delivered in a meeting in Eravur just after the last presidential election. I am really proud of you that you still remembered and still thankful to your master Velupillai Balakumar, the leader of EROS though you didn’t take any steps to find the son of Balakumar when you were in the cabinet.
ReplyDeleteAs you ( when you were in EROS) and many of us understood at that time and expected , SLMC and few minor political groups which split from SMLC, have played major role in creating the current mess-up for security of Muslim in this country . We can list hell of lots such moves starting from Tamil-Muslim ethnical problem to the current ethnic tensions with the majority extremist elements. Mainly, the SLMC’s decision to vote for the constitutional change to enable the president to extend his time as the country’s chief executive through future election, paved way for all the recent issues as Mahinda Rajapaksa had to be removed by the full voting power of minorities and Singhalese are feeling that they failed in this election against minorities. These kind of feelings added more fuel into the problems which were created by Buddhist radicals group against minorities.
Even though the common people must be educated on the current political situation and ethnically conflicting status, the question that you brought forward here in your article, must be answered within your party SLMC itself rather than by common people.
SLMC and other minor Muslim political groups have the sole responsibility to resolve the mess which was created by them.
You are a realistic person; you must be given a policy making posts in the party rather than taking posts in the government, because people like you failed to speak or failed to take actions when you were with the power in the government. In this way, the party would be guided in a right direction.
What is going on nowadays is crystal clear. The Singhalese expansions, ethnic cleansing, changing the ratio of ethnic diversity in the north & east in the favor of Buddhist radical, etc which all were stopped by Tamil’s struggle , are continuing now after the war was over, all these will take full form in the very near the future.
Why doesn’t your party take meaningful steps to overcome this aggressive policy of majority radicals and government ministers in a legal manner at the time you party occupy the chief minister post in Eastern province? Especially SLMSC and TNA can come to compromise on various Tamil-Muslim political issues and both North & East together can go to Supreme Court requesting the authority over land and police including reducing the power of governor. If these two authorities are taken under north & eastern provinces, the current problem can be faced legally rather than allowing common people to take the issues into their hand.