Header Ads



ட்ரம்ப்பிற்கு போகவுள்ள, இலங்கை குறித்த அறிக்கை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் தந்திப்பினை நடத்தவுள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் "தலையீடு செய்யாத வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக" முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.