அந்த கூட்டம், ஒரு புஷ்வாணம் - பீல்ட் மார்ஷல்
போர்க்குற்றம் மேற்கொண்ட நபர்கள் உள்ளார்கள் என்றால் தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உலகின் திறமையான இராணுவம் என்றாலும் தவறிழைக்கக்கூடிய சிலர் இருக்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்வத்து அஸ்கிரி மஹநாயவை நேற்று சந்தித்த போது பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனின் உயிரை காப்பாற்றுவதாக கூறி தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்பதற்கு, அவர் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்”.. என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை நகரம் என்பது தினமும் மாலையில் 4,000 முதல் 5,000 வரையான மக்கள் நடமாடும் நகரம். மகிந்த கோஷ்டிக்கு சுமார் 40 ,000 பேரை அழைத்து வர முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.
கடந்த காலத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களை ஒன்றிணைத்து கொண்டுதான் இவர்கள் செயற்பட்டனர். துவிச்சக்கர வண்டியில் வந்து காரில் செல்ல ஆரம்பித்தவர்களுக்கு வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப பணமில்லை.
அவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். திருடிய பணம் கையில் இல்லாத நிலையில், வாகன வசதிகளை கொடுத்து, சாப்பாடு, மதுபானத்தை கொடுத்து இப்படியான கூட்டத்தை நடத்துவது சுலபமானதல்ல.
மோசடியாளர்கள் ஒன்று கூடினார் என்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. இதனால், அந்த கூட்டம் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் அல்ல.
அந்த கூட்டம் ஒரு புஷ்வாணம் என அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை வாசுதேவ நாணயக்கார எனது நட்சத்திரத்தை பறிக்க முயற்சித்தால், நானும் மற்றுமொரு நட்சத்திரத்தை தரித்து கொண்டு உலகில் 6 நட்சத்திரங்களை தரித்த பீல்ட் மார்ஷல் என்று உலக சாதனை படைப்பேன்.
இதற்கு முன்னர் ஒருவர் எனது நட்சத்திரத்தை பறித்தார், ஆனால் நான் 5 நட்சத்திரங்களை தரித்த பீல்ட் மார்ஷலாக மாறினேன் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment