இப்படியும் ஒரு விநோதம்
நாட்டில் பிரபலமான 25 பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வீட்டு முகவரியும் மாணவர் ஒருவரின் வீட்டு முகவரிக்கு கொடுக்கப்ப ட்டுள்ளது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு ரோயல் கல்லூரியில் மாத்திரம் 31 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் தொகைக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். நாட்டில் உள்ள சுமார் 25 பிரபலமான பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனது அமைச்சில் குறைந்தளவு அதிகாரிகளே இருக்கின்றனர். ரோயல் கல்லூரியில் மாத்திரமல்ல ஏனைய பாடசாலைகளில் இரு ந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். விசாரணைகள் முன்னெடுக்கப்ப டுவதால் நாடு முழுவதும் மாணவர்கள் சேர்த்துக்கொள்வதை நிறுத்த முடியாது.
ரோயல் கல்லூரியில் இதுவரை 147 விண்ணப்பங்களின் வீடுகள் அமைந்துள்ள இடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. இதுவரை 340 மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த 147 விண்ணப்பங்களில் 31 விண்ணப்பங்கள் தகுதி யற்றவைகள்.
வாகன தரிப்பிடங்களையும்,வியாபார நிலையங்கள், பள்ளிகள், தூதுவராலயங்கள், அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட ங்கள்,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வீட்டு முகவரியும் மாணவர் ஒருவரின் வீட்டு முகவரிக்கு கொடுக்கப்ப ட்டுள்ளது. ஆகவே அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளளோம். கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் ஊடாக மாணவர்களை இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளன. பழைய மாணவர் சங்கமும் இதனுடன் தொடர்புபட்டுள்ளது.
பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய மாணவர் சங்கம் இதனூடாக இலாபம் சம்பாதித்து ள்ளது. இதனை தடுக்க வேண்டும். இதற்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.
Post a Comment