Header Ads



உலகபுகழ் வொக்ஸ்வேகன் கார் தயாரிப்பு - குளியாபிட்டியவில் அடிக்கல் நாட்டும் வைபவம்

உலக புகழ் பெற்ற வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் குளியாபிட்டியவில் இடம்பெறவுள்ளது.

ஜேர்மன் நாட்டின் மிகச் சிறந்த மோட்டார் வாகன தயாரிப்புக்களில் ஒன்றான வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளையை இலங்கையில் ஆரம்பிக்கும் நோக்கில் இன்றைய தினம் பிற்பகல் மூன்று மணியளவில் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 26.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அந்தப் பகுதியில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. Good initiative by the government..

    ReplyDelete
  2. 30 வருடங்கள் கழித்து திரும்பவும் கிடைத்துள்ள சந்தர்ப்பம் அன்று யாழ்ப்பாண நூலக எரியூட்டல் மூலம் தடுக்கப்பட்ட அபிவிருர்த்திகள் இன்று 30 வருட தாமதத்துக்கு பிறகு கிடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை சிஙகள இனத்தவர்களுக்கு புரிய வைப்பது இலங்கை வாழ் மக்களுக்கு கடமையாகும் சிங்கள மொழி மூலம்.

    ReplyDelete
  3. Believe this is not the Valkswagen Automobile factory...
    This is named as "Western Automobile" which mean the Assembling Workshop in Kuliyapitiya with logo of "W" not "vW"
    there is no any representatives from ValksWagen company....then is this political gilmart....?

    ReplyDelete

Powered by Blogger.