பேஸ்புக்கில் கவிதை எழுதிய, ஆசிரியரிடம் விசாரணை
கவிதைகள் சிலவற்றை எழுதி அவற்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவருக்கு எதிராக கல்வி அமைச்சின் மோசடிப் பிரிவினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் எச்.எம்.குஷான் ஷாலிக ஹேரத் என்ற ஆசிரியர் ஒருவருக்கு எதிராகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவர் அந்த கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கு தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியராகும்.
கல்வி அமைச்சின் மோசடி பிரிவு அதிகாரிகள் கடந்த 23ஆம் திகதி திடீரென குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்து குறித்த ஆசிரியர் கவிதை எழுதியமை மற்றும் அதனை பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியராக செயற்பட்டு கவிதை எழுதியமையினால் குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியத்திற்கும், கல்வி அமைச்சிற்கும் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய விசாரணை குழு, கவிதை எழுதும் ஆசிரியர்கள், மாணவர்களை தூண்டிவிடுகின்றீர்களா என அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவிதை எழுதுவது ஏன் எனவும், அவற்றினை பேஸ்புக்கில் பதிவிடுவது ஏன் என்பது தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள விசாரணை குழு பாடசாலையின் மேலும் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ளப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய மத்திய மாகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.ஏ.ஹேரத் என்பவர் கர்னல் ஒருவராகும். இதனால் அவரது கோரிக்கைக்கமைய கல்வி அமைச்சின் விசாரணை குழு பாடசாலைக்குள் நுழைந்திருக்க கூடும் என அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய அதிபரின் செயற்பாடுகளுக்கு எதிராக அந்த கல்லூரியின் ஆசிரியர்கள் சிலர் குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அன்றைய தினமே அந்த விசாரணை குழு பாடசாலைக்குள் நுழைந்து விசாரணை மேற்கொண்ட விடயம் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment