Header Ads



தாய் - தந்தை, பிள்ளைகள் இல்லை - யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகிறவனே நான்

எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவனே நான் யாருக்கும் அச்சம் இல்லை எவருக்கும் பணிந்தவனும் இல்லை. ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என நினைப்பவனே நான் எவருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல.

இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் வீடும் இல்லை வாகனமும் இல்லை அதனால் நேராக ஒரு பேச்சு ஒரு செயல் என உண்மை பேசுகின்றவனே நான் எனவும் ரஞ்சன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.