Header Ads



யாரு­டைய தேவைக்காக, ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்க முயற்­சி..?

ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்கி  நாட்டை அழி­வுப் ­பா­தைக்கு கொண்டு செல்ல அர­சாங்கம் முயற்­சிக்­கக்­ கூ­டாது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார். அத்­துடன் ஐரோப்­பிய ஒன்­றியம் ஜி.எஸ்.பி. சலு­கையை வழங்­கிய பின்­னரும்  ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்க அர­சாங்கம்  எதற்­காக முயற்­சிக்­க­ வேண்டும் எனவும் கேள்வி எழுப்­பினார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம்  கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி. சலு­கையைப் பெற்­றுக்­ கொள்­வ­தற்கு நாட்டில் ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்க வேண்டும் என நிபந்­தனை இருப்­ப­தாக பர­வலாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  என்­றாலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 27 நாடுகள் இலங்­கைக்கு ஜி.எஸ்.பி சலு­கையை வழங்­கு­வ­த­ற்கு ஆத­ர­வாக கைச்­சாத்­திட்­டுள்­ளன. 

இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் யாரு­டைய தேவைக்காக அமைச்­ச­ர­வையில் ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்க முயற்­சிக்­கின்­றது. 

அதே ­போன்று  கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த சலு­கையைப் பெற்­றுக்­ கொள்­வ­தற்கு முஸ்லிம் விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­ வேண்டும் என அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால் முஸ்­லிம்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­தனால் அது தடைப்­பட்­டது. தற்­போது இதனை சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்தி ஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்க திட்­ட­மி­டு­வ­தா­கவே தோன்­று­கின்­றது.

அத்­துடன் நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள பாரிய வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக மக்கள் அவ­திப்­பட்டு வரு­கின்­றனர். சகல மாவட்­டங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக விவ­சா­யிகள் பயிர்ச் செய்­கை­களை மேற்­கொள்ள முடி­யாமல் திண்­டாடி வரு­கின்­றனர். 

ஆனால் வரட்­சியால் பாதிக்­கப்­பட்டு வரும் மக்­க­ளுக்குத் தேவை­யான சலு­கை­களை பெற்­றுக்­ கொ­டுக்க அர­சாங்கம் இது­வரை எந்த வேலைத்­திட்­டத்­தையும் மேற்­கொள்ளவில்லை. அத்­துடன் நாட்டில் இவ்­வா­றான அழி­வுகள் மற்றும் சோத­னை­க­ளுக்கு நாட்டில் இடம்­பெ­றக்­ கூ­டிய அநி­யா­யங்­களும் கார­ண­மாகும்.

அத்­துடன் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒரு சில அமைச்­சர்­களின் ஆலோ­ச­னையின் அடிப்­ப­டை­யி­லேயே இடம்­பெ­று­கின்­றன. அதனால் அமைச்­சுக்­களில் இடம்­பெ­றக்­ கூ­டிய வேலைத்­திட்­டங்­களில் பாரி­ய­ ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. அதனால் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக ஜனா­தி­பதி தொடர்ந்து தலை­யிட்டு இதனைத் தடுக்­க ­வேண்டும். அமைச்­சுக்­களில் மோச­டிகள் இடம்பெற்றிருந்தால் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கை காரணமாக இந்த அரசாங்கம் மாறி வேறு அரசாங்கம் வந்தால் மோசடிகளில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயமாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு முன்னர் இவை திருத்தப்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.