'விமல் வீரவங்ச அரச வாகனங்களை, முறைகேடாக பயன்படுத்தியது உண்மையென்றால்'
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்பது உண்மையென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் "ஆசு மாரசிங்க" முதலில் கைது செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் "ஆசு மாரசிங்கவையே முதலில் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் "மொகமட் முஸம்மில்" தெரிவித்துள்ளார்.
எந்த ஆதாரமும் இன்றியே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச,பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டமைக்கு தாம் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் வாகன ஊழலில் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும்,அவர்களின் ஊழல்கள் வெளிவரவில்லை என்றும் முஸம்மில் கூறியுள்ளார்.
”ஜன செவன” வீட்டுத் திட்டம் நெருக்கமான அரசியல்வாதிகள்,குடும்ப உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மத குருமார்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.
எந்த இலாபமும் பெற்றுக்கொள்ளாமல் குறித்த திட்டத்தை தமது பெரும்பான்மை ஆதரவாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.
அவர்கள் குறித்த திட்டத்தை முடித்தமையினால் வாகன வசதிகள் வழங்கப்பட்டன, என முஸம்மில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு பல அரசியல் பிரமுகர்களின் உதவியுடனேயே விமல் வீரவங்சவை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
Post a Comment