Header Ads



வசீம் தாஜுடீன் கொலை, ஷிரந்தி மீது சந்தேகம், விசாரணையில் மைத்திரி தலையீடு


றகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை இடம்பெற்ற தினத்தன்று இரவு, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலானய்வு பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை குழுவினால் அலரி மாளிகை தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பிலான அறிக்கை பல மாதங்களாக விசாரணைக்காக கோரப்பட்டுள்ளன. இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த தொலைப்பேசி இலக்கம் கிடைப்பதற்கு தாமதமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்தன்று விடியும் வரை ஷிரந்தி ராஜபக்ச மேற்கொண்ட தொலைப்பேசி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக ஷிரந்தி ராஜபக்ச விசாரணை பிரிவிற்கு அழைப்படவுள்ளார் என அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் ஷிரந்தி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்படவிருந்த நிலையில் சமகால ஜனாதிபதியினால் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது.

அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் விசாரணை பிரிவு அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Local Government Election will be started in few months, "Thajudeen" is the key word

    ReplyDelete
  2. yes another episode of story begin.this time titled '' Recall Thajudeen ''.I hope this movie will flop without doubt.if not take proper action b4 election.

    ReplyDelete
  3. No more drama please let thajdeen alone

    ReplyDelete

Powered by Blogger.