Header Ads



அரிசியை வாங்கும்போது, அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. 

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொழும்பு - 11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதன்போது கைப்பற்றப்பட்ட அரிசிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய இது தொடர்பில் வழங்கப்படும் அறிக்கையின் படியே அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.