Header Ads



ஆட்சியைப் பிடிக்க மஹிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கி, வெளிநாடு சென்றபோதும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனவரியில் ஆட்சியைக் கைப்பற்றுவதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு, அது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில், அதை எதிர்காலத்தில் செய்யவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை மஹிந்த ராஜபக்ஸ சிதைத்துள்ளார். பொருளாதாரம் இன்று அவசர சிகிச்சைப் பிரிவாகியுள்ளது.

மேலும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் இணைந்து தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.