ஈரானுக்கு செல்வதை கைவிட்டார் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் ஈரானுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா அதிபர், ஈரானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், சிறிலங்கா அதிபரால், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்களில், வேறு முக்கிய பணிகள் இருப்பதால், இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதிருப்பதாக ஈரானிய அதிகாரிகளுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment