'எரியும் வீட்டில், பிடுங்கியது இலாபம்'
அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பொதுபல சேனாவே இருந்தது என்ற மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றுக்கெதிராகவும், பொதுபல சேனாவின் பின்னிருந்து கோதாபயவே அளுத்கம கலவரத்துக்கு உத்தரவிட்டார் என்ற அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கெதிராகவும் வழக்கு போடவுள்ளதாக பொதுபல சேனா கூறும் அதே வேளை அளுத்கம சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நிறுவி விசாரிக்க நல்லாட்சி அரசு ஏன் பயப்படுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த அரசாங்கத்தில் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கெதிராக பல அநியாயங்கள் செய்தது. இதற்கு சில முஸ்லிம் பிற்போக்குவாதிகளும் காரணமாக இருந்தனர். ஹலால் பிரச்சினை, ஜமிய்யத்துல் உலமாவுக்கெதிரான நிலைப்பாடு என்பவை எல்லாம் தமக்கு சில முஸ்லிம்களே சொல்லித்தந்தந்தார்கள் என பொது பல சேனா பகிரங்கமாக கூறியது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பேருவலையில் நடை பெற்ற கூட்டமொன்றில் ஞானசார தேரர் சிங்கள மக்களை உசுப்பேற்றியதன் பின்னரே கலவரம் நடை பெற்றது.
அந்தக்கலவரம் வேறு இடங்களுக்கு பரவாமல் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கட்டுப்படுத்தியதை நாம் மறுக்க முடியாது. ஆனாலும் இராணுவமும் பொலிசும் நீதியாக செயற்பட்டிருந்தால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆனாலும் இப்போது இந்தக்கலவரத்தின் பின்னணியில் மஹிந்தவா, கோட்டாபயவா, பொது பல சேனாவா,ராஜிதவா, அல்லது மஹிந்தவை வீழ்த்த ரணில் மேற்கொண்ட சதியா என எதுவும் நிரூபிக்கப்படாமல் ஆளை ஆள் குற்றம் சாட்டுவதையே காண முடிகிறது.
உண்மையில் இது மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடை பெற்ற ஒன்று என்பதால் அவரது ஆட்சிக்காலத்தில் இது பற்றிய உண்மையை கண்டறிவது சிரமம் என்பது உண்மை என்றிருந்த போதும் மஹிந்தவுக்கெதிரான இந்த ஆட்சியிலும் இதன் பின்னணியை நீதி மன்றத்தின் துணையுடன் நிரூபிக்க அரசு பின்நிற்பதும் அளுத்கம கலவரத்தை பொதுபல சேனாவே ஏற்படுத்தியது என கூறும் அமைச்சர் ராஜிதவின் அரசாங்கத்தில் தொல்பொருள் ஆய்வு ஆலோசகர்களாக பொது பல சேனா இருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
அளுத்கமை என்பது ராஜிதவின் மாவட்டமாக இருப்பதால் கலவரம் நடந்த வேளை அவரும் அமைச்சராக இருந்தும் ஏன் ராஜிதவினால் உடனடியாக கலவரத்தை அடக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது என்பது எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம் என ஏன் அவரும் வாளாதிருந்தார் என்பவையும் பலத்த கேள்விகளாக உள்ளன.
ஆகவே அளுத்கம பற்றி உடனடியாக ஜனாதிபதி கமிசன் நியமித்து உண்மையை கண்டறியும் கடப்பாடு 98 வீத முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற நல்லாட்சி அரசுக்குள்ளது. உடனடியாக இதனை செய்யாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ சொல்வது போல் அவரது ஆட்சியை கவிழ்க்க இன்றைய ஆட்சியாளர்கள் செய்த சதியே அளுத்கம கலவரம் என்பதை முஸ்லிம்கள் ஏற்க வேண்டி வரும்.
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:105)
www.tamililquran.com
evara arikkaviduratha nerutha sollavum
ReplyDelete