Header Ads



யாழ்ப்பாணம் அஹதியா பாடசாலைக்கு, உதவி செய்வோமா..?

-Jansin-

ஒஸ்மானிய கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும் அஹதியா பாடசாலையின் நிலமையினை அறியும் நோக்குடன் நாம் ஒரு விஜயத்தை மேற்கொண்டோம். 

இந்த அஹதியா பாடசாலை முன்னர் முபாரக் மௌலவி அவர்களால் நடத்தப் பட்டுவந்தது. அவர் திடீரென்று பாடசாலையிலிருந்து நீக்கப் பட்டதன் காரணமாக நிர்வாகிகள் இன்றியிருந்த இந்த அஹதியா பாடசாலை ஒஸ்மானியாவில் பாதுகாப்பு ஊழியராக செயற்படும் அப்துல் ரஹீம் அவர்களினால் பொறுப்பேற்கப் பட்டு மிகுந்த சிரமத்தின் மத்தியில்  நடத்தப் பட்டு வருகின்றது. தற்போது இதற்கு உதவியாக சகோதரர் எம்.ஐ. லாபிர் (பிலவுஸ்) , சகோதரர் ஐ. எல். நிராஸ்  அவர்களும் செயற்படுகின்றனர். 

இந்தப் பாடசாலை ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறுகின்றது. இஸ்லாம், வரலாறு, பிக்ஹ் மார்க்கச் சட்டம் போன்ற பாடங்கள் இங்கு கற்பிக்கப் படுகின்றது. ஏறக் குறைய 120 மாணவர்கள் இங்கு கல்வி கற்று பயன் பெறுகின்றனர். 

இவர்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினை இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு சம்பளம் எதுவும் கிடைப்பதில்லை. நான்கு ஆசிரியைகள் கற்பிக்கின்றனர். ஏனைய ஊர்களில் அஹதியாவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ஐந்து ஆயிரம் சம்பளமாக வழங்கப் படுகின்றது. மார்க்க அறிவு முக்கியமானது. எனவே அவற்றை கற்க உதவி செய்வதும் ஸதகதுல் ஜாரியா போன்ற நிலையான தர்மமாக இருக்கும். ஒரு மாணவர் கற்று அந்த அறிவை பிரயோகிக்கும் கால்த்திலும் அவரிடம் இருந்து அறிவைக் ஏதாவது ஒரு வகையில் கற்போர் இப்படி அறிவு பல பரம்பரைகளுக்கு பரவிச் செல்லும்.  இதனால் மரணித்த பின்பும் உதவி செய்தோருக்கு நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

யாழ்ப்பாணத்தில்  ஆங்கிலம், வர்த்தகம், கணிதம் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கக் கூடிய  சிறந்த ஆசிரியைகள் எமது சமூகத்தில் உள்ளனர். எனவே இந்த அஹதியாவின்  ஆசிரியர் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்கலாம். ஆசிரியருக்கும் நிர்வாகி அப்துல் ரஹீம்  ஆகியோருக்கும் சம்பளமாக தலா 5,000 வழங்கினால் இந்த அஹதியா வகுப்பை திறம்பட நடத்தலாம் என்பது இங்கு கற்பிக்கும் ஆசிரியைகளின் கருத்தாகும். மாதாந்தம் 35 ஆயிரம் இருந்தால் திறம்பட செய்யலாம். 

ஏற்கனவே சுற்றுலா வந்த மாவனல்லையைச் சேர்ந்த சிலர் இந்த அஹதியா மாணவர்களுக்கு சீறுடைகளை வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பல செல்வந்தர்கள் இருந்தும் இந்த விடயத்துக்கு யாரும் உதவி செய்வதில்லை என தெரியவருகின்றது. 

இந்த சதகதுல் ஜாரியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல  உதவுமாறு சகோதரர்களையும் வெளிநாடு வாழ் யாழ் முஸ்லிம்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

இது விடயமாக பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 0777067366, 0752218601, 0775976619 



No comments

Powered by Blogger.