Header Ads



கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோஹ்லி - நாசர் ஹுசைன் புகழாரம்


இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி, கிரிக்கெடின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

புனேவில் நடந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 350 ஓட்டங்கள் குவித்தது.

351 வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி, யுவராஜ், டோனி உட்பட 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

ஆனால் கோஹ்லி கேதர் ஜாதவ் ஜோடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இவர்கள் விட்டுச்சென்ற பணியை பாண்டியா, அஷ்வின் ஜோடி சிறப்பாக தொடர்ந்தது.

இது குறித்து முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நாசர் ஹுசைன் கூறியது,

ஒவ்வொரு முறையும் விராட் கோஹ்லி களமிறங்கும் போதும், பந்தை எல்ல்லைக்கோட்டை தாண்டி எப்படி அனுப்புவது என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

எல்லாவிதமான கிரிக்கெட்டுக்கும் கோஹ்லி அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது அதிகபட்சம் என இனி யாரும் விமர்சிக்க முடியாது.

300 ஓட்டங்களை துரத்துவது சாத்தியம் தான் ஆனால், 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்த பின் 350 ஓட்டங்களை துரத்துவது என்பதில் இருந்தே இதற்கான பதில் உள்ளது.

இவரை பார்க்கும் போது, கால்பந்து அரங்கில் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் நினைவுக்கு வருகிறார்.

லயோனல் மெஸ்சிக்கு இயற்கையாகவே திறமை உள்ளது. ஆனால் ரொனால்டோ கால்பந்து அரங்கில் தன்னை தானே வளர்த்துக்கொண்டவர்.

அதனால் தான் அவர் களத்திலும், வெளியிலும் சாதிக்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் கோஹ்லி, கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என அவர் கூறினார்.

அத்தோடு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் விளையாடிய கோஹ்லிக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.