தேசியப் பட்டியல் ஆசனத்தை, திருப்ப ஒப்படைக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயற்படப் போவதாக அறிவித்துள்ள அதுரலிய ரத்தன தேரர், ஐதேகவின் தேசியப் பட்டியல் ஆசனத்தை திருப்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
சுதந்திரமாகச் செயற்படப் போவதாக முடிவு செய்துள்ள அதுரலிய ரத்தன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவார் என்று தமது கட்சி எதிர்பார்ப்பதாக, ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐதேகவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கு இடையில் செய்து கொள்ளப்படட உடன்பாட்டுக்கு அமையவே, அதுரலிய ரத்தன தேரருக்கு ஐதேகவின் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதாகவும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
இதனிடையே சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட முடிவு செய்துள்ள அதுரலிய ரத்தன தேரர், தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டு விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக, ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டு விலக மறுத்தால், அவருக்கு எதிராக ஐதேக சட்ட நடவடிக்கையில் இறக்கக் கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
Post a Comment