Header Ads



இலங்கையில் சீனாவின் நாணயம்

இலங்கை மத்திய வங்கியினால் தினசரி வெளியிடப்படும் பிரதான நாணய மாற்று வீத பட்டியலில் சீனாவின் நாணயமும் இணைந்துள்ளது.

2017ஆம் ஆண்டில் இருந்து சீன நாணயமான ரென்மிபினை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் முறையாக 2017ஆம் ஆண்டு நாணய மாற்று விகதி பட்டியல் இன்றைய -02- தினம் மத்திய வங்கியினால் வெளியிட்ப்பட்டுள்ளது.

அதில் சீனாவின் ரென்மிபி ஒன்றிற்காக கொள்வனவு விலை 21.07 ரூபாய் மற்றும் விற்பனை விலையாக 22.11 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதுவரை மத்திய வங்கியின் பிரதான நாணய மாற்று விகித பட்டியலில் பதிவாகியுள்ள நாணயங்களான, அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, சுவிட்சர்லாந்தின் பிராங்க், கனடியன் டொலர், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகிய 8 நாணயங்களுக்கு மேலதிகமாக இன்றைய தினம் சீனாவின் ரென்மிபி இணைந்துள்ளது.

No comments

Powered by Blogger.