இலங்கையில் பேஸ்புக், ஏற்படுத்திய பயங்கரம்..!
சமூக ஊடகமான பேஸ்புக் ஊடாக ஏற்படும் உறவினால் இளைய சமுதாயம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோன்று பேஸ்புக்கில் அறிமுகமாகிய உறவினால் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிலியன்தலை பிரதேசத்தின் பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பெண் அபிவிருத்தி அதிகாரியாக கடமை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதுடைய அந்த பெண் 51 வயதுடைய நபருடன் இவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த தொடர்பு நீண்ட தூரம் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளனர். சிறிது காலம் சென்ற பினனர் இந்த நபர் அந்த பெண்ணை சந்தித்து வல்லுறவிற்கு உட்படுத்த பலவந்தப்படுத்தியுள்ளார்.
எனினும் அந்த பெண் இதற்கு விரும்பாமையினால் கூர்மையான ஆயுதம் ஒன்றை காட்டி அந்த நபர் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
இவ்வாறு கடத்தி சென்று பெண்ணின் ஆடை கிழித்து அவரது உடல் மீது தீ வைத்து அவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதோடு, பெண்ணின் கணவருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து சென்ற சந்தர்ப்பத்தில் பெண் தனது கணவருக்கு தகவல் வழங்கியுள்ளார். பாழடைந்த வீடொன்றில் தான் தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பெண்ணின் கணவர் பிலியந்தலை பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், கணவர் ஊடாக தொலைப்பேசி அழைப்பொன்றை மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு பெண்ணை கடத்தின நபர், தன்னை சந்திப்பதற்காக அத்துருகிரியவுக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெற்றுக் கொண்ட தகவல்களுக்கமைய பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அந்த பெண் அத்துருகிரியவில் அமைந்துள்ள அந்த நபரின் வீட்டில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment