'முஸ்லிம்களுக்கு எதிரான, தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த இருந்தார்'
கடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந்தார் என்று, சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேன குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தம்மைத் தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சியினரும், மேற்குலக அரசாங்கங்களும் இணைந்தே, பொது பலசேனா என்ற அமைப்பை உருவாக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பொது பலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.
“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களே அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெப்பிலியானவில் முஸ்லிம் வர்த்தகரின் பசன் பக் ஆடையகம் மீது பௌத்த பிக்குகள் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில், இருந்தனர்.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இருந்ததால் தான், குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச கண்ணாடி வீட்டுக்குள் இருந்த கல் எறியக்கூடாது.
இப்போது மகிந்த ராஜபக்ச தனது வீடுகள், தனது கார்கள், தனது குடும்பத்தினர், தனது பாதுகாப்புப் பற்றி மட்டுமே பேசுகிறார்.
பொது பலசேனா அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிங்கள சமூகத்தினரையே பிரதிநிதித்துவம் செய்கிறோம்.
பொது பலசேனாவுக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அலுத்கமயில் "அபஸரனை" சொன்னவர் கலகொட அத்தே தான்.
ReplyDelete3 அடி மண் கேட்டான் வமனண் உலகிலே 3ரென வைத்ததோ மண்ணவன் தலையிலே.வளர்த்த கண்ணனோ தந்தையின் மார்பிலே மாறும் அவதரமே இது தான் உலகிலே.கண்ணா நீயும் நானுமா.
ReplyDeleteethu therintha kathathan bbs solli theriya vandiya nilail muslimkal illai...
ReplyDeleteவரலாற்று ரீதியாக இலங்கை முஸ்லிம்கள் தேச நலன்களை முற்படுத்தி செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் நிறையவே காணப்படுகின்றன.
ReplyDeleteசிங்கள மன்னர்களுடன் இணைந்து பல்வேறு பங்களிப்பினை வழங்கி வந்தனர். பின்னர் சுதந்திரத்திற்காகவும் இணைந்து போராடினர். ஏனையோர் ஐம்பது ஐம்பது கோரிக்கை விடுத்த போதும் பெரும்பான்மையுடன் அனுசரித்து செயற்பட்டனர்.
இவற்றையெல்லாம் மறந்து,சிந்தனை சிதைந்த பல்வேறு குழுக்கள் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக முஸ்லிம்களை சீண்டுவதனை பிரதான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு தனிப்பட்டரீதியில் சிறுபின்னடைவு ஏற்பட்டாலும் கூட்டுமொத்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் இதன் அறுவடையை சுவைக்க வேண்டி ஏற்படும். கடந்த30 வருடகால யுத்தம் இதனை ஊர்ஜிதம் செய்திருக்க மதிகெட்ட பேரினவாதிகள் இலங்கையின் எதிர்காலத்தை கபளிகரம் செய்ய கங்கணம்கட்டுகின்றனர்.
இந்நிலையில் மாறி மாறி வரும் அரசுகள் எம்மைச் சீண்டுவதும் தலையில் மிளகாய் அரைப்பதும் பின்னர் தமாசிக்கு தலைப்பாகை கட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.
எனவே முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்துவமாக சாதுர்யமாக செயற்படுவது அவசியமாகும்.
Govt playing master mind game.govt is doing good job with recism.they are very intelligent team still remain.Janury 8th Ist Operation.2nd Operation started now.will what hapoend in the future.insha allah
ReplyDeleteWell said Mr. Mohamed Lafir
ReplyDeleteமஹிந்தவை குற்றம் சாட்டி விட்டு சம்பிக்கவை காப்பாற்ற முயட்சி எடுக்கின்றார்கள்
ReplyDelete