ஞானசாரரை அழைத்தமை, முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்
முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் வில்பத்து பிரதேசத்தை, வன ஜீவராசிகள் வலயமாக மேலும் விஸ்தரிக்கும் உத்தேச வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்துமாறும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுவித்துள்ளது.
இந் நாட்டில் கடும் போக்காளர்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்கள் தொடர்பாக நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அதன் தேசியத் தலைவர் பீ.எம்.பாரூக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி நியாயம் பெறப்பட வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இக்கடித்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
* இலங்கையில் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சமூக விரோத, இனவிரோத செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் முஸ்லிம்களுக்கிடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. 93% சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் இறங்கியுள்ள அபாயகரமான இந்த கும்பலை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துவது தங்களின் தலையாய கடமையாகும்.
* தங்களால் ஸ்தாபிக்கப்படவிருக்கும் உத்தேச தொல் பொருளியல் ஆணைக்குழுவிற்கு தமிழ், முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரு அங்கத்தவர்களை நியமிக்குமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் சிபாரிசு செய்கிறது.
* யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் அகதிகள் புத்தளம் பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் புனர்வாழ்விற்காக தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற எத்தனிக்கும் போது அநாதரவற்ற அந்த முஸ்லிம்களை மேலும் நிர்க்கதிக்கு உள்ளாக்குவதாக அமையப்போகும் உத்தேச கெசட் அறிக்கையை இடைநிறுத்துமாறும் அவர்கள் அப்பகுதிகளில் இருந்து மீண்டும் விரட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதை உறுதிப்படுத்துமாறும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வேண்டிக் கொள்கிறது.
* பிரசித்திபெற்ற நான்கு இலங்கை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 32 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஆதாரமற்ற தவறான தகவல்களைக் கொண்ட அறிக்கையை அகில இலங்கை லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தன்னால் கூறப்பட்ட நான்கு பிரசித்திபெற்ற குடும்பத்தினரின் பெயர்களை வெளியிடுமாறு நாம் நீதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுகின்றோம். இல்லாவிடில் இக்கூற்று பெரும்பான்மை சமூகத்தினரின் இதயங்களில் அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பற்றிய தவறான சந்தேக மனப்பான்மையை தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆகையால் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையை உடன் வாபஸ் பெறுமாறு அவரை வலியுறுத்துமாறும் இன்றேல் அவரை அப்பதவியில் இருந்து நீக்குமாறும் வலியுறுத்துகிறோம்.
தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இனக்கலவரத்தைத் தூண்டுவதற்குச் செயற்பட்டதாக இனங்காணப்பட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக அரசியல் மற்றும் பதிவுசார் தொடர்பற்ற ஞானசார தேரரையும் அழைத்துச் சென்ற நீதியமைச்சர் ஞானசார தேரருடன் வைத்திருக்கும் உறவையும் அவரது செயற்பாடுகளையும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனாதிபதியினதும், கபினட் அமைச்சர்களினதும் நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் விரோத செயற்பாட்டு முக்கியஸ்தராக விளங்கும் ஞானசார தேரரை அழைத்தமை முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் என சம்மேளனம் கருதுகிறது என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சிகாலங்களில் காடு அழிச்சி குடியேற்ற முறைகள் செய்யவில்லையா?பிரேமதாச ஆட்சியில் கம்முதாவ திட்டம் முழுவதும் காடுகள் அழிச்சே மேட்கொள்ளப்பட்ட திட்டங்களாகும் உதாரணமாக வெள்ளவாய,மொனராகலை,மஹியங்கனை பிரதேசங்களில் 1980 -- 1990 காலங்களில்.மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் விமானநிலையம்,துறைமுகம் இன்னும் பல திட்டங்கள்.இவ்வாறு பல பல சிங்கள ராஜாக்களால் செய்யும் போது யாருடைய கண்ணுக்கும் விளங்குவதுயில்லை ஆனால் முஸ்லிம்களின் சொந்த பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்யும் போது மட்டும் தான் சிங்கள இனவாதிகளுக்கு தெரியாது காடு அழிப்பு.
ReplyDeleteஅரசியல்
ReplyDeleteMaithree is a consummate racist.
ReplyDeleteமைத்திரி நாட்டுமக்கள் எல்லாருக்கும் தான் ஜனாதிபதி.
ReplyDelete