இலங்கையருக்கு டுபாய் பொலிஸார் செய்த மனிதாபிமான உதவி
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மகளை பார்வையிடச் சென்ற இலங்கை பிரஜை ஒருவர் டுபாய் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார்.
குறித்த இலங்கை பிரஜை போலி கடவுச்சீட்டுடன் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு அவர் மீண்டும் டுபாய் வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் டுபாய் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட இலங்கை பிரஜை, டுபாய் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே குறித்த இலங்கை பிரஜை, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அவரது மகளை பார்வையிடச் செல்வதற்கு டுபாய் பொலிஸ் அதிகாரிகள் உதவியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரை தொடர்பு கொண்டு இலங்கை பிரஜையின் பயண ஆவணங்கள் தொடர்பிலான பிரச்சினையை தீர்த்து வைத்து குறித்த தந்தைக்கு டுபாய் பொலிஸார் உதவியுள்ளனர்.
டுபாயிலுள்ள மனித உரிமைகள் திணைக்களத்தின் மூலம் பணம் செலுத்தப்பட்டு புதிய டிக்கட் ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இவ்வாறான பிரச்சினையுடைய பலருக்கு டுபாய் பொலிஸார் உதவியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க மட்டும் டுபாய் பொலிஸ் அதிகாரிகள் இல்லை, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சமூக உணர்வும் தங்களுக்கு உள்ளது என டுபாயிலுள்ள மனித உரிமைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
This work of ARAB world is not showcased in srilankan news papers, rather if their is an individual arab make a mistake.. It is being generalized in srilanka news.
ReplyDeleteWhen it comes to helping the public, Dubai police is similar to the UK police. Once, they pushed my car to safety when it got stuck on the road. For some, they have even helped to change the flat tyre. When you are good you will be treated with utmost respect by Dubai police! If you are caught on a crime, you will see the other side of them! From my experience, in treating the good public, I would rank them next to UK Police!
ReplyDeleteWhat is this news.? Once says, " Deported from Dubai". And again says., " The Dubai Police arranged the ticket ". Crazy news.
ReplyDelete