Header Ads



சேற்றில் இறந்து கிடந்த மொஹமட் மீட்பு - நெஞ்சை உருகவைத்துள்ள புகைப்படம்


மியான்மர் நாட்டில் ரொஹிங்கியா இன முஸ்லீம் மக்கள் மீது அந்நாட்டு இராணுவனத்தினர் மேற்கொண்டு வரும் வன்முறைகள் காரணமாக, ரொஹிங்கியா மக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்கின்றனர்.

இவ்வாறு, அகதிகளாக தஞ்சம் அடைவதற்கு சிறு படகுகள் மூலம் Naf River மற்றும் வங்கதேச எல்லை வழியாக செல்கின்றனர்.

உயிரை பணயம் வைத்து பயணிக்கும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கதேசத்தை அடைந்தாலும், பலரது வாழ்க்கை எல்லைப்பகுதியோடே முடிந்துவிடுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

Mohammed Shohayet என்ற 16 மாத குழந்தை தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் Naf ஆற்றின் வழியாக வங்கதேசத்திற்கு பயணித்துள்ளான்.

இதில், ஆற்றின் பாதி வழியில் சென்றுகொண்டிருந்தபோதே படகு மூழ்கியுள்ளது. இதில் இறந்து போன குழந்தை Mohammed, ஆற்றின் கரையோரம் அடித்துசெல்லப்பட்டு, கரையில் தேங்கி கிடந்த மண் சதியில் முகம் முக்கியபடி இறந்துகிடந்து நெஞ்சை உருகவைத்துள்ளது.

இக்குழந்தை இறந்துகிடக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து Mohammed- யின் தந்தை கூறியதாவது, மியான்மரில் நாங்கள் தங்கியிருந்த கிராமத்தில் இராணுவனத்தினர் துப்பாக்கிளை கொண்டு அட்டூழியம் நடத்தி வந்தனர்.

எனது தாத்தா பாட்டியினை சுட்டுக்கொன்றனர். நாங்கள் வசித்து வந்த ஒட்டுமொத்த கிராமமே இராணுவனத்தினரால் அழிக்கப்பட்டது. இதனால் அவர்களின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக வங்கதேசத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்தோம்.

ஆனால், எனது மகன் இந்த பயணத்தின் போது இறந்துகிடந்த நிலையை பார்க்கையில், நான் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறேன் என எண்ண தோன்றுகிறது என கூறியுள்ளார்.

புத்த மதத்தினர் அதிகமான வசிக்கும் மியான்மரில் ரொஹிங்கியா முஸ்லீம்கள் சிறுபான்மையினர் என்பதால் இவர்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Where muslim countries and UN?Why they all are very silence to talk Burmian muslims situation?Why don´t send muslims countries army to save their muslims!

    ReplyDelete
  2. பெண்களையும் சிறு குழந்தைகளையும் நிராயுதபானிகளையும் கோழைத்தனமாக கொலை செய்யும் காட்டுமிரான்டிகளுக்கு நோப்பல் பரிசு.வேடிக்கையான உலகம்.

    ReplyDelete
  3. Bulbulli same like India send to save ur tamils

    ReplyDelete
  4. UN must implement a resolution against Myanmar's callous government and Muslim countries should send infantry to eradicate the brutal Myanmar's army.
    All these so-called leaders of Muslim countries should respond in the day of Judgement, in sha Allah.

    ReplyDelete

Powered by Blogger.