ரத்ன தேரரின் இடத்திற்கு கடும்போட்டி, ரணில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலங்கள் சிலருக்கிடையில் பனிப்போரொன்று நடந்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ரத்தன தேரர் சுயாதீனமாகச் செயற்பட முடிவெடுத்த பின் அவரது இடம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டுமென ஒருசாரார் பிடிவாதமாக இருப்பதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும், இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment