முந்திக்கொண்டு முடிவெடுக்காதீர்கள் (படிப்பினைக்குரிய சம்பவம்)
தொலைபேசியை எடுத்து ஒருவர் பதட்டத்துடன் தனது உற்ற நண்பனிடம் பேச ஆரம்பிக்கிறார் எனது பிள்ளையின் மருத்துவச் செலவிற்கு மிக அவசரமாக 5000 /- பணம் தேவை என்கிறார், உடனே அவரது நண்பன் அரை மணித்தியாலங்கள் பொறுத்திருங்கள், இதோ நான் வந்து தருகிறேன் என்றான்,
இரண்டு மணித்தியாலங்கள் கழிகிறது. அவரைக் காணவில்லை.
சரி என்னை ஏமாற்றி விட்டான் என நினைத்து அவனது தொலை பேசி இலக்கத்தை அழுத்துகிறார், அவரது போன் ஓப் செய்யப்பட்டள்ளது.
உண்மையிலே என்னை ஏமாற்றி விட்டான் என்று முடிவெடுத்துக் கொண்டு அவரது தொலை பேசிக்கு ஒரு மெசேஜை இப்படி அனுப்புகிறார்
நீ என்னை ஏமாற்றியது போதும் நான் இனி உனக்கு போன் பண்ண மாட்டேன்.
போனை திறந்து நீ விரும்பியவர்களுடன் பேசு, எனக்குப் பயந்து ஓப் செய்ய வேண்டாம், இது போன்ற நயவஞ்சகத் தனத்தை இனிமேல் யாருக்கும் செய்ய வேண்டும் என்று....
இரண்டரை மணித்தியாலங்களின் பின் அந்த நண்பனிடமிருந்து இவருக்கு கோள் வருகிறது. நண்பன் நான் உங்களுக்கு எங்குவந்து தர வேண்டும் என்னிடம் தற்போது, நீங்கள் கேட்ட தொகையளவு பணம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கையில்,
மெசேஜ் வரும் ஓசை கேட்கிறது சற்று தாமதியுங்கள் மெசேஜை பார்த்துவிட்டுப் பேசுகிறேன் என்றான் நண்பன், இவர் அனுப்பிய குறுஞ் செய்தியைப் பார்த்து
கவலையடைந்த நண்பன் கண்ணீருடன்
தன்னைப் புரிந்து கொள்ளாத நண்பனிடம் தாமதித்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மையில் நீங்கள் கேட்கும் போது என்னிடம் பணம் இருக்கவில்லை.
எனது நண்பனுக்காக என்னிடமிருந்த ஒரே ஒரு சொத்தான 7000 பெறுமதியான மொபைல் போனை கடையில் விற்பதற்குச் சென்றபோது போனை அணைத்து விட்டேன். அதனை விற்று கிடைத்த 7000 பணத்தில் எனக்கு 2000/- பெறுமதியான ஒரு தற்காலிக போனை வாங்கித்தான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். மீதி 5000/- நான் எங்கு வந்து உங்களுக்கு ஒப்படைக்க வேண்டும என்றான்.
கண்களில் நீர் ததும்ப அவசரப்பட்டு விட்டோமே என்ற மனக்குமுறலுடன் பேச வார்த்தையின்றி தடுமாறினான்.
வாழ்க்கையில் சில விடயங்களை பெறுவதற்கு இறைவன் வகுத்திருக்கும் அந்த நேரம் வரும் வரை நாம் பொறுத்தாக வேண்டும்.
அவசரப்படுவதனால் நமக்கு கிடைக்க இருக்கும் பெரிய நலவுகள்கூட சில வேளை நம்மை விட்டு கை நழுவிப் போகலாம்.
நட்பில் தூய்மை வேண்டும் அது ஒரு கூட்டு வணக்கம் என்பதனால் தூய்மையுடன் அர்ப்பணமும் புரிந்துணர்வும் மிக அவசியம். நல்ல நண்பர்களை நாம் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நாம் அவர்களை மட்டுமல்ல அவர்களது நட்பண்புகளையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே இழக்க நேரிடும்.
உங்களிடம் இருக்கும் ஒன்றை இழந்தேனும் நல்ல நண்பனுக்குக் கொடுங்கள்
கொடுத்து இறைவனிடம் பன்மடங்கு பெறுங்கள்.
ஒருவரைப் பற்றி, முழுமையான அறிவின்றி, முந்திக் கொண்டு முடிவெடுக்காதீர்கள்.
நன்றி - அரபு இணையம்.
- நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
Useful article.... Masha Allah. It was very nice to read and get adve.tg in our life. We always wish to get more useful article in future.
ReplyDeleteNANREE NANFA KANGAL KALANKIVIDDATHU
ReplyDelete"பதறிய காரியம் சிதறும்" அதற்கு இது தகுந்த உதாரணம்.
ReplyDelete