மஹிந்தவை பிரதமராக்க, மைத்திரியிடம் கோரிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தின் உடன்படிக்கை முடிவடைந்த பின்னர், மேலும் காலம் தாழ்த்தாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்லது கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசிய அமைப்பின் பிரதிநிதியான சிரேஷ்ட சட்டத்தரணியான கலாநிதி நளின் டி சில்வா இந்த கோரிக்கை விடுத்தள்ளார்.
இந்த கருத்தரங்கில் எல்லே குணவங்ச தேரர், கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய எல்லே குணவங்ச தேரர், வேறு தரப்பினருடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வது போல், எதிர்காலத்தில் தமது ஆதரவு தேவை என்றால், தன்னுடனும் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
கலாநிதி நளின் டி சில்வா, எல்லே குணவங்ச தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சிங்கள தேசியவாதத்தை பிரதிநிதித்துப்படுத்தும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனுகளுக்கு வேற வேலை இல்லையா?
ReplyDelete