ஜும்ஆ நேரத்தில், என்னிடம் வரவே வேண்டாம் - மனோ கணேசன்
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை நாளை (20) நான் சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாலும் வேறு ஒரு விடயத்துக்காகவும் அவருடன் இன்று (19) தொலைபேசியில் உரையாடினேன்.
இதன்போது நாளை சந்திப்பது தொடர்பில் அவரிடம் நான் கேட்ட போது அவர் என்னை பகல் 1.00 மணியளவில் அமைச்சுக்கு வரும்படி கூறினார். நாளை வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணி என்பது ஜும்ஆ தொழுகை நேரம் என்பதனை நான் எனது மனதுக்குள் நினைத்தவனாக, சரி 1.30 மணியளவில் போகலாமென எனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டு நீங்கள் குறிப்பிட்டபடி சுமார் 1.00 மணியளவில் உங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன்.
உடனடியாக அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே கீழே தருகிறேன்.
”இல்லை..இல்லை.. சித்தீக்! நாளை வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணிக்கு உங்கள் ஜும்ஆ நேரம். என்னிடம் வரவே வேண்டாம். அதனை முடித்து விட்டு வாருங்கள். நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன்” என்று..
இவர்தான் நான் கண்ட அமைச்சர் மனோ கணேசன்.. ஆனால், 15 வருடங்களுக்கு மேலாக அவருடன் நான் மிகுந்த பிரியமாக, அவருக்கு மரியாதை செய்தவனாக இருப்பதற்கு இது மட்டும் ஒரு காரணம் அல்ல. என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment