Header Ads



ஓரினச் சேர்க்கை, திருமணங்களுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாட்டு திட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரி நிராகரித்துள்ளார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற் திட்டங்களில் இலங்கையில் அமுல்படுத்தப்பட முடியாத பரிந்துரைகளை நிராகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதன்படி ஓரினச் சேர்க்iகாயளர் திருமணங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கப் பெறுகின்றது.

எனவே, இந்த செயற் திட்ட பரிந்துரைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இந்த விடயம் அசிங்கம் என்று புரிந்து கொண்ட ஜனாதிபதிக்கு நன்றி,GSP+ சலுகை என்ற பெயரில் மேற்கத்திய நாட்டில் உள்ள அசிங்கங்களை நமது நாட்டில் புகுத்த முயற்சியில் இறங்கி இருக்கும் நாசதாரிகளை இனங்காண வேண்டும்,GSP+தருவதற்கும் இந்த அசிங்கத்துக்கும் முஸ்லிம்களின் விவாக சட்டத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது,இது சில அதிகாரிகளால் பாலியல் இலஞ்சம் கேட்பது போல் உள்ளது இவர்களின் நடவடிக்கைகள்.அரசாங்கம் விளிப்பாக இருக்கவில்லை என்றால் ஆபிரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்று இலங்கையிலும் HIV AIDS நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும்,

    ReplyDelete
  2. ஒவ்வொரு வீட்டிலும் விபச்சாரத்தை அறிமுகம் செய்வதே G S P யின் மறைமுகம்

    ReplyDelete
  3. EU is try to promote

    1. STOP legal marriage system by implementing AGE limit. BUT
    2. INITIATE homosexual marriage, which even animals do not involve.

    EU is trying to HELP or DESTROY Srilanka ?

    Only Human characters will oppose EU but others may support EU deal.

    ReplyDelete

Powered by Blogger.